twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    18 வயசுக்கு கீழ இருக்குறவங்க என் படத்தை பார்க்காதீங்க.. வேண்டுகோள் விடுத்த வெங்கட்பிரபு!

    |

    சென்னை : மாநாடு வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு இப்பொழுது மன்மத லீலை என்ற படத்தை இயக்கியுள்ளார்

    இளம் காதலர்களை குறித்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் பல அடல்ட் காட்சிகள் சேர்க்கப்பட்டு இளைஞர்களை கவரும் வகையில் உள்ளது

    வரும் ஏப்ரல் 1ம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு 18 வயதிற்கு உட்பட்டவர்கள் யாரும் படம் பார்க்க வேண்டாம் என வெங்கட்பிரபு அறிவுறுத்தி உள்ளார்.

    கேவலமா போகுது.. அஜித், விஜய் ரசிகர்களின் சண்டை தான் கோலிவுட் சினிமாவின் பின்னடைவுக்கு காரணமா?கேவலமா போகுது.. அஜித், விஜய் ரசிகர்களின் சண்டை தான் கோலிவுட் சினிமாவின் பின்னடைவுக்கு காரணமா?

    மாநாடு வெற்றி

    மாநாடு வெற்றி

    வெற்றி தோல்வி என மாறி மாறி சினிமாவில் சந்தித்துக் கொண்டிருக்கும் வெங்கட் பிரபுவுக்கு மாநாடு மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. சிம்புவின் நடிப்பில் தொடங்கப்பட்ட இந்த படம் சில பல காரணங்களால் பல்வேறு தடைகளை தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது அதனால் தயாரிப்பாளருக்கும் சிம்புவுக்கும் ஏற்பட்ட பிரச்சனை கோர்ட் வரையிலும் சென்றது ஒரு வழியாக இரு தரப்பும் சமாதானத்திற்கு உட்பட்டு படமும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது.

    திரில்லர் கதையை

    திரில்லர் கதையை

    கலகலப்பாகவும் கிளுகிளுப்பாகவும் படங்களை இயக்கி வரும் வெங்கட் பிரபு இந்த முறை சற்று வித்தியாசமான கதைக்களத்தில் திரில்லர் கதையை கையில் எடுத்துள்ளார். டைம் லூப் பாணியில் வெளியான மாநாடு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. சிம்பு மிகவும் வித்தியாசமான ரோலில் நடித்து கம்பேக் கொடுத்துள்ளார். மேலும் நடிகர் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்து மிரட்டியிருப்பார். கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி அமரன், எஸ் ஏ சந்திரசேகர், கருணாகரன் உட்பட பலர் நடித்திருந்த அந்த படம் வெற்றி பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது

    அடல்ட் காட்சிகளுக்கு முக்கியத்துவம்

    அடல்ட் காட்சிகளுக்கு முக்கியத்துவம்

    மாநாடு வெற்றியைத் தொடர்ந்து வெங்கட் பிரபு தற்போது இயக்கியுள்ள திரைப்படம் மன்மத லீலை. கலகலப்பாகவும் கிளுகிளுப்பாகவும் படங்களை இயக்கி வந்த வெங்கட் பிரபு இந்த படத்தில் முழுவதும் கிளுகிளுப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இளம் காதலர்களை பற்றி இளமை ததும்ப பல அடல்ட் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ளார்.

    மன்மத லீலை

    மன்மத லீலை

    சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்ம்ருதி வெங்கட் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் பிரேம்ஜி, கருணாகரன்,ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மன்மத லீலை ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. முழுக்க முழுக்க அடல்ட் காட்சிகளால் நிரம்பியுள்ள இப்படத்தின் டிரைலர் இளைஞர்கள் மத்தியில் தனி கவனத்தை பெற்றுள்ளது.

    என் படத்தை பார்க்காதீங்க

    என் படத்தை பார்க்காதீங்க

    இந்த நிலையில் மன்மத லீலை பட விழாவில் பேசிய வெங்கட் பிரபு இப்படத்திற்கு 18 வயதுக்கு உட்பட்டவர்கள் யாரும் படம் பார்க்க வரவேண்டாம். இது ஃபுல் அண்ட் ஃபுல் அடல்ட் சப்ஜெக்ட்டில் எடுக்கப்பட்ட படம் என அறிவுறுத்தி உள்ளார்.

    English summary
    Below 18 Years People Dont watch manmadha leelai movie says Venkat prabu
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X