உடலில் சர்க்கரை அளவு குறைந்தது... பிரபல நடிகை மருத்துவமனையில் திடீர் அனுமதி!

சென்னை : புகழ்பெற்ற பிரபல நடிகை இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது 80.

வங்கமொழி திரைத்துறையில் சிறந்த நடிகைககளில் ஒருவராக கருதப்படுபவர் மாதாபி முகர்ஜி. இவர் புகழ் பெற்ற இயக்குநர் சத்யஜித்ரேயின் மகாநகர், சாருலதா, காபுருஷ் , மிருணாள் சென்னின் பைஷே ஷரபோன், கொல்கத்தா 71 போன்ற வெற்றி பெற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். திப்ரதிரிர் கப்யா படத்திற்காக தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

வங்காளத்தில் புகழ் பெற்ற நடிகையாக இருந்த, மாதாபி முகர்ஜி வங்காளத் திரையுலகின் பழம்பெரும் நடிகர் நிர்மல் குமாரை திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

Bengali actress Madhabi Mukherjee was hospitalised.

இந்நிலையில், 80வயதான மாதாபி முகர்ஜியின் உடலில் சர்க்கரை அளவு குறைந்ததை அடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் அனுமதித்தனர். அவரின் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இருப்பினும், மாதாபி முகர்ஜியின் உடல் நிலை பலவீனமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளையும் மருத்துவர்கள் செய்துள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் கூறியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X