Don't Miss!
- News
அடடே .. பீகாரில் இனி நிலையான அரசு தொடரும்... நிதிஷ்குமாரை ஓஹோவென பாராட்டிய பிரசாந்த் கிஷோர்!
- Finance
குழந்தை, வேலை எனது அற்புதமான இரட்டையர்கள்.... எடெல்வீஸ் MD ராதிகா குப்தா!
- Lifestyle
ஆண்களைப் பற்றிய இந்த ரகசியங்களை பெண்கள் ஒருபோதும் தெரிந்து கொள்ள முடியாதாம்... அது என்னென்ன தெரியுமா?
- Sports
"நீங்களே இப்படி செய்யலாமா".. இந்திய மகளிர் அணி குறித்து கங்குலி போட்ட ட்வீட்.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
சீரியல் நடிகை தற்கொலையில் திடீர் திருப்பம்… காதலன் கைது !
கொல்கத்தா: பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவரது காதலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், பல்லவியின் தற்கொலை குறித்து, அவருடன் சீரியலில் நடித்த சக நடிகரிடம் போலீசார் விசாணையை தொடங்கி உள்ளனர்.
சீரியல் நடிகை தற்கொலை வழக்கில் காதலன் கைது செய்யப்பட்டுள்ளது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கன்னட நடிகை மட்டுமில்ல.. பிளாஸ்டிக் சர்ஜரியால் இத்தனை பிரபலங்கள் மரணம்.. ஷாக்கிங் ரிப்போர்ட்!

பல்லவி தே
'மோன் மனே நா' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கதாநாயகியாக நடித்தவர் பெங்காலி நடிகை பல்லவி தே. இவர் கொல்கத்தாவில் கர்ஃபாவில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். கடந்த 15ந் தேதி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்

நான் வீட்டில் இல்லை
நடிகை பல்லவி தே , அவரது காதலர் சாக்னிக் சக்ரவர்த்தியும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். பல்லவியின் தற்கொலையை அடுத்து, சாக்னிக் சக்ரவர்த்தியிடம் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, பல்லவிக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அவர் தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் நான் கடைக்கு சென்று விட்டதாகவும் கூறியிருந்தார்.

மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்
மேலும், சாக்னிக்கின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சாக்னிக்கின் தாயார், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்தனர் என்றும், அவர்கள் இருவருக்கும் இடையே, பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால், எந்த காரணத்திற்காக பல்லவி தற்கொலை செய்து கொண்டார் என்று எங்களுக்கு தெரியாது என்று தெரிவித்து இருந்தனர்.

காதலன் கைது
இந்நிலையில் பல்லவி தேவின் தந்தை, தன் மகள் தற்கொலைக்கு சங்னிக் தான் காரணம் என்றும் அவர் மீது கொலை, சதி, பண மோசடி உள்பட பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார் . இதையடுத்து, காதலர் சாக்னிக் சக்ரவர்த்தியை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.