twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மிரட்டும் கொரோனா.. சீரியல்களில் முத்தக்காட்சிக்கு தடை.. குழந்தைகளுக்கு அனுமதியில்லை.. அதிரடி முடிவு!

    |

    சென்னை: கொரோனா வைரஸ் மிரட்டி வரும் நிலையில் சீரியல்களில் முத்தக்காட்சிகள் மற்றும் நெருக்கமான காதல் காட்சிகளை எடுப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    உலக நாடுகளையெல்லாம் பதம் பார்த்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளது.

    எங்கேயும் எப்போதும் எஸ்.பி.பி. சங்கீதம்.. பாடு நிலா பாலுவுக்கு பிறந்தநாள்.. குவிகிறது வாழ்த்து!எங்கேயும் எப்போதும் எஸ்.பி.பி. சங்கீதம்.. பாடு நிலா பாலுவுக்கு பிறந்தநாள்.. குவிகிறது வாழ்த்து!

    பாதிப்பு

    பாதிப்பு

    இந்நிலையில் சில இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு சில பணிகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் சின்னத்திரை மற்றும் சினிமா படப்பிடிப்புகளும் இந்த கொரோனா வைரஸின் தாக்கத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பல தொழிலாளர்கள் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அனுமதி

    அனுமதி

    இதனை தொடர்ந்து பல மாநிலங்களில் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. வரும் 6ஆம் தேதி முதல் தமிழகத்தில் படப்பிடிப்புகள் தொடங்கும் என கூறப்படுகிறது.

    ஆலோசனை கூட்டம்

    ஆலோசனை கூட்டம்

    இதேபோல் மேற்குவங்க அரசும் நிபந்தனைகளுடன் படப்பிடிப்பை தொடங்க அனுமதி வழங்கியுள்ளது. இதனை முன்னிட்டு அம்மாநில சின்னத்திரை தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் தொலைக்காட்சி அதிகாரிகள் படப்பிடிப்பின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.

    நெருக்கமான காட்சிகள்

    நெருக்கமான காட்சிகள்

    அப்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முத்தக்காட்சிகள் மற்றும் நெருக்கமான காதல் காட்சிகளை எடுக்கக்கூடாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை படப்பிடிப்பில் பயன்படுத்தக் கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதிரடி முடிவு

    அதிரடி முடிவு

    மேலும் படப்பிடிப்பில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும் தேவைப்படும் போது மட்டும் மாஸ்க்கை விலக்க வேண்டும் என்றும் அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடுதல் மூலமே கொரோனா வைரஸ் பரவுகிறது என கூறப்படும் நிலையில் மேற்குவங்க சின்னத்திரை இப்படியான அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.

    English summary
    Bengali TV industry decided to do not shoot intimate scenes in serials. Due to Corona Bengali TV industry taken the decision.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X