Pushpa 2: நடுராத்திரி வர நினைத்த புஷ்பா 2.. கடைசி நேரத்தில் வைத்த ஆப்பு. இப்படி ஆகிப்போச்சே!

பெங்களூரு: தெலுங்கு சினிமா, தென்னிந்திய சினிமா என இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய இந்திய சினிமாவும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கும் படம் புஷ்பா 2. நாளை அதாவது டிசம்பர் 5ஆம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. படம் ரிலீஸ்க்கு முன்னரே ரூபாய் 1000 கோடிகளுக்கு மேல் வியாபாரம் செய்து விட்டதால், பாக்ஸ் ஆபிஸில் படம் தாறுமாறு கலெக்‌ஷனை அள்ளப்போகின்றது எனக் கூறப்படுகின்றது.

இப்படியான நிலையில் புஷ்பா 2 படக்குழுவினருக்கு பெரும் சிக்கலான தலைவலியான உத்தரவு கர்நாடகாவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

allu arjun bengaluru 2

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் என பல்வேறு நடிகர்கள் நடிப்பில் உருவாகி கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. இந்தப் படத்தினை சுகுமாறன் இயக்கினார். மைத்ரீ மூவீஸ் தயாரித்த இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்தார். படம் வெளியாகி பெரும் வெற்றிப் படமாக மாறியது. படத்தின் க்ளைமேக்ஸில் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டதால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது பெரும் ஆவல் ஏற்பட்டது.

allu arjun bengaluru 2

இப்படியான நிலையில் நாளை புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்திற்கான புக்கிங் ஏற்கனவே தொடங்கி வெகு சிறப்பாக போய்க்கொண்டு உள்ளது. படம் முதல் நாளே ரூபாய் 300 கோடிகளுக்கு மேல் கலெக்‌ஷனை அள்ளும் என படக்குழு எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளது. புஷ்பா 2 படத்திற்காக தெலுங்கானா மற்றும் ஆந்திராவில், டிக்கெட்டுகளின் விலையை அரசு ஒப்புதலுடன் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் ரசிகர்கள் படத்தினைப் பார்க்க அவலுடன் டிக்கெட்டுகளை வாங்கிச் செல்கின்றனர்.

allu arjun bengaluru 2

நள்ளிரவுக் காட்சி: இப்படியான நிலையில் படத்தினை நள்ளிரவு 12 மணிக்கு ரிலீஸ் செய்யக்கூடாது என கர்நாடகா மாநிலம் பெங்களூரூ மாவட்டத்தின் மாவட்டத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் ஏற்கனவே திட்டமிட்டுள்ள நள்ளிரவுக் காட்சிகளை உடனே ரத்து செய்யவேண்டும் எனவும், மாவட்ட ஆட்சித் தலைவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த உத்தரவை மாவட்ட ஆட்சித் தலைவர் தானாக பிறப்பிக்கவில்லை.

allu arjun bengaluru 2

டிக்கெட் விலை: மாறாக, கர்நாடக திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினரின் தரப்பில் இருந்து, மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் கடிதம் கொடுக்கப்பட்டது. அதில், புஷ்பா 2 படத்திற்கு அரசு நிர்ணயம் செய்த தொகையைவிடவும் அதிக ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாகவும், அரசிடம் முறையான ஒப்புதல் பெறாமல், நள்ளிரவுக் காட்சிகளை திரையரங்க உரிமையாளர்களே திட்டமிட்டுக்கொண்டதாகவும் குறிப்பிட்டனர்.

allu arjun bengaluru 2

உத்தரவு: இவர்களின் புகார் கடிதத்தினைப் பெற்றபின்னர், இது தொடர்பாக உடனே ஆய்வு செய்யச் சொன்ன பின்னர், நள்ளிரவுக் காட்சிகளை ரத்து செய்யச் சொல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அரசிடம் முறையான அனுமதி பெறாமல் நள்ளிரவுக் காட்சிகளுக்கு திட்டமிட்ட திரையரங்க உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

allu arjun bengaluru 2

இது புஷ்பா படக்குழுவினரை கொஞ்சம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் கர்நாடக திரையுலகப் படங்களும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நல்ல வசூல் செய்து வரும் நிலையில், இவர்கள் ஏன் இப்படியான புகாரினை புஷ்பா படத்திற்கு எதிராக அளிக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேநேரத்தில் புஷ்பா 2 படத்தின் கர்நாடக தியேட்டர் உரிமம் ரூபாய் 30 கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

allu arjun bengaluru 2

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X