வீட்டிலேயே போதை பார்ட்டி.. பிரபல தயாரிப்பாளரை கைது செய்த போலீசார்.. பரபரப்பில் திரையுலகம்!

பெங்களூரு: போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக பிரபல கன்னட தயாரிப்பாளரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளது தென்னிந்திய திரையுலகத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

நாடு முழுவதும் போதைப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மும்பையை தொடர்ந்து கர்நாடக சினிமா துறையில் அதிக அளவு போதைப் பொருள் புழக்கம் உள்ளது தொடர்ந்து அம்பலமாகி வருகிறது.

ரியா சக்கரவர்த்தி

ரியா சக்கரவர்த்தி

சுசாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை தொடர்ந்து பாலிவுட்டில் போதைப் பொருள் தொடர்பான விசாரணைகள் சூடுபிடித்தன. நடிகையும் சுஷாந்தின் முன்னாள் காதலியுமான ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது சகோதரர் செளவிக் சவுத்ரி உள்ளிட்ட பல பிரபலங்கள் கைது செய்து விசாரிக்கப்பட்டனர்.

சிக்கிய நடிகைகள்

சிக்கிய நடிகைகள்

போதைப் பொருள் விவகாரத்தில் பாலிவுட்டில் நடிகைகள் தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பெயர்கள் அடிபட்டு விசாரணை செய்யப்பட்டனர். பாலிவுட்டை தொடர்ந்து கன்னட திரையுலகிலும் போதைப் பொருள் புழக்கம் இருப்பதை அறிந்த நார்காடிக்ஸ் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியதில் பிரபல நடிகைகளான ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ரானி உள்ளிட்ட நடிகைகள் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது.

தயாரிப்பாளர் கைது

தயாரிப்பாளர் கைது

இந்நிலையில், தற்போது சாண்டல்வுட்டின் பிரபல தயாரிப்பாளரான சங்கர் கவுடாவை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவருக்கு சொந்தமான குடியிருப்புகளில் ஏகப்பட்ட பிரபலங்களுக்கு சட்டவிரோதமாக போதை பார்ட்டிகளை நடத்தியதாக ஆதாரங்கள் சிக்கி உள்ளதாக பெங்களூரு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

ரெய்டு நடத்திய போலீசார்

ரெய்டு நடத்திய போலீசார்

சில போதைப் பொருள் கடத்தல்காரர்களை கைது செய்து நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலை தொடர்ந்து கடந்த மார்ச் 8ம் தேதியே தயாரிப்பாளர் சங்கர் கவுடா இல்லத்தில் கோவிந்தபுரா போலீசார்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர் மஸ்தான் சந்திரா மற்றும் நடிகர் தனிஷா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தீவிர விசாரணையின் முடிவிலேயே தயாரிப்பாளரை செவ்வாயன்று போலீசார் கைது செய்துள்ளனர்.

25 பேர் மீது வழக்கு

25 பேர் மீது வழக்கு

இந்த மாத தொடக்கத்தில் கிரைம் பிரான்ச் அதிகாரிகள் சுமார் 25 பேர் மீது போதைப் பொருள் விவகாரத்தில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சார்ஜ்ஷீட் போட்டுள்ளனர். ராகிணி திவேதி, சஞ்சனா கல்ரானி, வினய் குமார், பிகே ரவி சங்கர், ஆதித்யா ஆல்வா, வீரன் கன்னா, ராகுல் தோன்ஸ், ஆதித்யா அகர்வால், பிரசாந்த் ரங்கா, ஸ்ரீனிவாஸ் சுப்பிரமணியம், அம்ப்ரோஸ், லூம் பெப்பர், அஸ்வின் குமார், மேலும், நைஜீரியாவை சேர்ந்த 4 நபர்கள் உள்பட மொத்தம் 25 பேர் இந்த விவகாரத்தில் வசமாக சிக்கி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X