லண்டன் முதல் கோலிவுட் வரை ஆதித்யா வர்மா நாயகியின் பயணம்

Recommended Video

நா தளபதி ரசிகன் | ACTOR DHRUV VIKRAM | ADITHYA VARMA TEAM INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL

சென்னை : பனித்தா சந்து லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவழி குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் குடும்பம் இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் இருந்து லண்டனில் குடிபெயர்ந்து இருதலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர் சிறுவயதில் இருந்து மாடலிங் மற்றும் நடிப்பில் தீவிரமாக கவனம் செலுத்தி வந்தார்,அதற்கான அங்கீகாரம் கிடைத்து சிறுவயதில் இருந்தே தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் வந்தார் . மேலும் இவருக்கு யூடீவி விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது .

டபுல்மிண்ட் தயாரித்த 'ஏக் அஜினபி' என்ற மீயுஸிக் வீடியோவில் பனித்தாவுக்கு வாய்ப்பு கிடைத்தது ,அதன் மூலம் பனித்தா பிரபலமாகினார் .பனித்தாவுக்கு 2016ல் ஃபாக்ஸ் விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

Bennita gives her best with the star kid DHRUV along with priya anand.

2017ல் பனித்தாவுக்கு அவர் வாழ்வின் மிக முக்கியமான வாய்ப்பு கிடைத்தது, அது தான் வருன் தவானின் படமான 'அக்டோபர்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு, இயக்குனர் சூஜித் சிர்கார் இயக்கிய அப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் பாராட்டபட்டது .அந்த படத்தில் வருன் தவானின் ஒருதலை காதலியாக நடித்திருப்பார் பனித்தா, அந்த படத்தில் ஒரு விபத்தால் பாதிக்கபட்டு கோமாவில் உயிருக்கு போராடி வரும் பெண்ணாக நடித்திருப்பார் ,அந்த படம் மற்ற கமர்சியல் படங்களை போல் இல்லாமல் ஒரு இயற்கையான சினிமாவாக எடுக்க பட்டதும் அதில் பனித்தா மற்றும் வருண் சரியாக நடித்ததும் தான் படத்தின் வெற்றியாய் கருதப்படுகிறது. அந்த படத்தில் பெரும்பாலான காட்சிகளில் பனித்தா இல்லையென்றாலும் அவர் வரும் காட்சிகளில் மிக தத்ரூபமாய் நடித்திருந்தார்.

Bennita gives her best with the star kid DHRUV along with priya anand.

அதற்கு பிறகு வர்மா படம் டிராப் செய்யபட்டு ஆதித்யா வர்மா என்ற பெயரில் புதிதாக தயாரிக்க தயாரானது அந்த படத்தில் இயக்குனர் கிரிசைய்யா மூலம் கதாநாயகியாக தேர்ந்தெடுக்கபட்டார் . தெலுங்கில் ஷாலினி பாண்டே நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் இவர் நடித்துள்ளார் . தற்போது படத்தின் விளம்பரத்துக்காக இந்தியாவில் வந்து புரோமஷன்களில் கலந்து கொண்டிருக்கிறார் .தற்போதும் பனித்தா லண்டனில் தான் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பனித்தாவிற்கு இப்போது ஆதித்யா வர்மா படத்தின் மூலம் நடிகை ப்ரியா ஆனந்த் இவருக்கு நல்ல நண்பராகி உள்ளார் ,ப்ரியா ஆனந்தும் ஆதித்யா வர்மா படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்,தற்போது பெரும்பாலான இடங்களில் பனித்தாவும் ப்ரியா ஆனந்தும் ஒன்றாகவே சென்று நேரங்களை செலவழித்து வருகின்றனர்.பனித்தா, துருவ் விக்ரம்,ப்ரியா ஆனந்த் போன்ற பலரும் நடித்துள்ள ஆதித்யா வர்மா படம் நவம்பர் 8 ரிலீஸாக உள்ளது.

எமி ஜாக்சன் போல் ஆங்கிலம் மட்டுமே பேச தெரிந்த
பனித்தா சந்து தமிழ் கற்றுகொள்வாரா ? மிக பெரிய இயக்குனர்கள் பார்வையில் இவர் திறமைகள் செல்லுபடி ஆகுமா ? பொறுத்து இருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X