மண்டையில ட்ரோன் மோதிச்சே.. இப்போ எப்படி லிப் லாக் அடிக்கிறாரு பாருங்க பென்னி தயாள்!
சென்னை: பிரபல பின்னணி பாடகர் பென்னி தயாள் லிப் லாக் முத்தம் கொடுக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான பாபா படத்தின் மூலம் கடந்த 2002ம் ஆண்டு பாடகராக அறிமுகமானவர் பென்னி தயாள்.
சமீபத்தில் விஐடி கல்லூரி விழாவில் கச்சேரி ஒன்றில் பாடிக் கொண்டிருந்த போது பென்னி தயாளின் தலையில் ட்ரோன் மோதி விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில்
ரஜினிகாந்தின் பாபா படத்தில் இடம்பெற்ற "மாயா மாயா" பாடலை பாடி தமிழ் சினிமாவில் பிரபலமான பென்னி தயாள் இந்தியில் கஜினி உள்ளிட்ட பல படங்களில் ஏ.ஆர். ரஹ்மான், ப்ரித்தம் இசையில் பாடல்களை பாடினார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் லேசா லேசா பாடல், சிவாஜியில் பல்லேலக்கா, ஜிவி பிரகாஷ் இசையில் பொல்லாதவன் படத்தில் நீயே சொல் உள்ளிட்ட பல பாடல்களை பாடி பாடகராக இசை ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.

சூப்பர் ஹிட் பாடல்கள்
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஓமண பெண்ணே, எந்திரன் அரிமா அரிமா, மைனா நியூம் நானும், 7ஆம் அறிவு ஓ ரிங்கா ரிங்கா, விஸ்வரூபம் துப்பாக்கி எங்கள் தோளிலே, தலைவா தமிழ் பசங்க, ஆர்ஆர்ஆர் கோலே கோலே என ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களை பாடி அசத்தி உள்ளார்.

ட்ரோன் விபத்து
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஜட்ஜாக பல சீசன்கள் பங்கேற்ற பென்னி தயாள் சமீபத்தில் விஐடி கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கச்சேரி ஒன்றை நடத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக ட்ரோன் ஆப்பரேட்டர் பென்னி தயாளின் மண்டையிலேயே ட்ரோன் விட்டு விட்டார். கை விரல்களிலும், தலையிலும் லேசாக அடிபட்ட நிலையில், நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார் பென்னி தயாள்.

மனைவியுடன் ஃபேஷன் நிகழ்ச்சிக்கு
லேக்மி ஃபேஷன் வீக் நிகழ்ச்சிக்கு தனது மனைவி கேத்தரின் தங்கத்துடன் சென்ற நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராமில் தற்போது ஷேர் செய்துள்ளார் பென்னி தயாள். தலையில் அடிபட்டது சரியாகிடுச்சா சார் என ரசிகர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.

அப்படியொரு லிப் லாக்
ஃபேஷனில் அதிகம் ஆர்வம் கொண்ட தனது தோழியான கேத்தரினை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பென்னி தயாள் தற்போது அவருடன் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிலையில், இருவரும் அடித்துக் கொண்ட லிப் லாக் புகைப்படத்தையும் பதிவிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











