மொட்டை தலையில சீப்பு.. பென்னி தயாள் போட்ட வீடியோ.. டிரோன் மோதியதால் இப்படி மாறிட்டாரா?

சென்னை: பிரபல பின்னணி பாடகர் பென்னி தயாள் தொடர்ந்து வீடியோக்களாக வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறார்.

சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டு பென்னி தயாள் பாட்டு பாடி அசத்தி வந்த நிலையில், அவரது தலைக்கு அருகே ட்ரோன் விடுறேன்னு ட்ரோன் ஆப்பரேட்டர் உணர்ச்சி வசத்தில் பென்னி தயாள் தலையிலேயே டிரோனை மோத விட்டு சம்பவம் செய்து விட்டார்.

இந்நிலையில், பென்னி தயாள் போட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ ஒன்று ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளது.

பாடகர் பென்னி தயாள்

பாடகர் பென்னி தயாள்

பாபா பட மாயா மாயா முதல் சிவாஜி பட பல்லேலக்கா வரை ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களை பாடி அசத்தி வரும் பென்னி தயாள், ஏ.ஆர். ரஹ்மானின் இன்னொரு அசத்தலான கண்டுபிடிப்பு என்றே சொல்லலாம். தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடி வரும் பென்னி தயாள் சமீப காலமாக வீடியோக்களில் டிரெண்டாகி ரசிகர்கள் மத்தியில் அதிகமாக அறியப்பட்டு வருகிறார்.

மண்டையில் மோதிய டிரோன்

மண்டையில் மோதிய டிரோன்

விஐடி கல்லூரி விழாவில் பென்னி தயாள் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றிக் கொண்டிருந்த போது பென்னி தயாள் தலையில் டிரோன் மோதி விபத்துக்குள்ளானதில் அவரது தலையில் லேசான காயமும் கை விரல்களில் லேசான காயமும் ஏற்பட்டன. அதன் பிறகு நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றார் பென்னி தயாள். அதிர்ஷ்டவசமாக அவருக்கு பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

மனைவிக்கு லிப் லாக்

மனைவிக்கு லிப் லாக்

சமீபத்தில் நடைபெற்ற லேக்மி ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் தனது மனைவி கேத்தரின் உடன் கலந்து கொண்டார் பென்னி தயாள். ஃபேஷன் துறையில் ஆர்வமாக செயல்பட்டு வரும் அவரது மனைவி கேத்தரின் அந்த நிகழ்ச்சிக்கு பென்னியை அழைத்துச் சென்ற நிலையில், இருவரும் ஒன்றாக இணைந்து லிப் லாக் அடித்த புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை குவித்தனர்.

மொட்டை தலையில் சீப்பு

உங்க வீட்ல நீங்க இனிமே பயன்படுத்தவே முடியாத பொருள் என்றால் உங்களிடம் என்ன பொருள் இருக்கு என ரசிகர் ஒருவர் சமீபத்திய சாட்டில் பென்னி தயாளிடம் கேட்க, உடனடியாக குறும்புப் பிடித்த பென்னி தயாள் சீப்பு தான் எனக் கூறி ஒரு சீப்பை எடுத்து தனது மொட்டை தலையில் சீவுவது போல பாவலா பண்ணி இனிமே இதுக்கு எப்பவுமே வேலை இல்லை என ஃபன் பண்ணி உள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.

பிரைனுக்கு ஏதும் பாதிப்பு இல்லையே

பிரைனுக்கு ஏதும் பாதிப்பு இல்லையே

மொட்டை தலையில் சீப்பு வைத்து சீவுவது போல பென்னி தயாள் ஃபன் பண்ணும் விதமாக வீடியோ வெளியிட்ட நிலையில், சில ரசிகர்கள் டிரோன் மோதியதில் இருந்தே ஒரு மாறி ஆகிட்டீங்க பென்னி என்றும், பிரைனுக்கு ஏதும் பாதிப்பில்லையே என கமெண்ட் போட்டு ஜாலியாக கலாய்த்து வருகின்றனர்.

பால்ட் அண்ட் பியூட்டிஃபுல்

பால்ட் அண்ட் பியூட்டிஃபுல்

யாரு சொன்னா நான் சோகமா இருக்கேன்னு, என்னோட மென்டாலிட்டி எப்படி இருக்குன்னு பாருங்க என Bald and Beauty என சூப்பராக கேப்ஷன் கொடுத்து லைக்குகளையும் வியூஸ்களையும் அள்ளி வருகிறார். டிரோன் விபத்து குறித்தும் அந்தடிரோன் இப்போ பறக்குதா என்றும் பலவிதமான கிண்டல் கமெண்ட்டுகளும் குவிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X