பென்னி தயாளின் அதிரடி முடிவுக்கு அவரோட மனைவி கேத்தரின் தங்கம் என்ன சொன்னாங்கன்னு தெரியுமா?

சென்னை: சூப்பர் சிங்கர் சீசன் 8ல் நடுவர்களின் ஒருவராக இருக்கும் பிரபல பின்னணி பாடகர் பென்னி தயாள் எடுத்த முடிவுக்கு அவரது மனைவி கேத்தரின் தங்கம் ஆதரவு தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ஷோ சூப்பர் சிங்கர்.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பின்னணி பாடகர்கள் கலக்கி வருகின்றனர்.

குரலுக்கான தேடல்

குரலுக்கான தேடல்

சாமானியர்களும் சூப்பர் சிங்கர் ஆக முடியும் என்பதை உணர்த்தும் வகையில் விஜய் டிவி அமைத்து தந்த மேடை தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றி சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியையும் அறிமுகப்படுத்தியது. தமிழ் சினிமாவின் அடுத்த ஹாட்டான வாய்ஸை தேடித் தரும் இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

அப்செட்டான பென்னி தயாள்

அப்செட்டான பென்னி தயாள்

ரொம்பவே சாஃப்ட்டா பேசக் கூடிய பிரபல பின்னணி பாடகர் பென்னி தயாள். கடந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் காரணமாக ரசிகர்கள் பண்ண டார்ச்சரை பொறுக்க முடியாமல் இனிமேல் சூப்பர் சிங்கர் சீசன் 8 பற்றி ஒரு வார்த்தைக் கூட மூச் விடமாட்டேன் என்றும் அடுத்த சீசனில் யார் வந்து அழைத்தாலும் பங்கு பெற போவதில்லை என்கிற அதிரடி முடிவை அறிவித்து பரபரப்பை கிளப்பினார்.

எலிமினேஷனால் வந்த வினை

எலிமினேஷனால் வந்த வினை

ஸ்ரீதர்சேனா எனும் போட்டியாளரை கடந்த வாரம் நடுவர்கள் அனைவரும் சேர்ந்து வெளியேற்றியது தான் இந்த சர்ச்சை வெடிக்க காரணமே. சூப்பர் சிங்கர் சீசன் 8ல் கலந்து கொண்ட திறமையான போட்டியாளர்களில் ஸ்ரீதர் சேனாவும் ஒருவர். மேலும், அவருக்கு சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்களும் உள்ளனர். அவரை நடுவர்கள் திடீரென நீக்கிய நிலையில், இது ரியாலிட்டி ஷோவே கிடையாது. எல்லாமே பித்தலாட்டம் என ரசிகர்கள் திட்ட ஆரம்பித்து விட்டனர்.

பென்னி தயாளுக்கு நெருக்கடி

பென்னி தயாளுக்கு நெருக்கடி

சூப்பர் சிங்கர் சீசன் 8ல் ஜட்ஜாக இருக்கும் பலரது சமூக வலைதள கணக்குகளுக்கும் சென்று ஏகப்பட்ட ஹேட் மெசேஜ்களை அனுப்பி ரசிகர்கள் கொடுத்த தொல்லை காரணமாக பென்னி தயாள் இப்படியொரு அதிரடி முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். அடுத்த சீசனிலும் பங்கேற்க போவதில்லை என அவர் அறிவித்து இருப்பது நிகழ்ச்சி குறித்தும் ஏகப்பட்ட சந்தேகங்களை ரசிகர்கள் மத்தியில் எழுப்பி இருக்கிறது.

மனைவி என்ன சொன்னாரு

மனைவி என்ன சொன்னாரு

பிரபல பின்னணி பாடகர் பென்னி தயாளின் மனைவி கேத்தரின் தங்கம் இந்த விவகாரத்தில் பென்னி தயாளின் முடிவுக்கு முழு ஆதரவு அளித்துள்ளார். சூப்பர் சிங்கர் போன்ற ஒரு பெரிய மேடையை இப்படி உடனடியாக உதறித் தள்ளுவது என்பது பெரிய முடிவு உன்னை எண்ணி பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

மென்டலி யோசிக்க முடியாது

மென்டலி யோசிக்க முடியாது

இதுபோன்ற பிரச்சனைகள் வரும் போது யாரா இருந்தாலும் மென்டலி திங்க் பண்ணி தான் முடிவை எடுக்கணும். ஆனால், அந்த நேரத்தில் நெருக்கடியான மன நிலையில், யாராலும் மென்டலி யோசிக்க முடியாது. மனதுக்கு தோன்றியதை தான் நீங்க சொல்லி இருக்கீங்க.. எந்த நேரத்திலும் உங்களுடன் துணையாக இருப்பேன் என்றும் அவரது மனைவி முழு ஆதரவை அளித்திருக்கிறார்.

ரசிகர்கள் ஆதரவு

ரசிகர்கள் ஆதரவு

சூப்பர் சிங்கர் சீசன் 8ல் போட்டியாளர்களாக இருப்பவர்களும், பாடகர் பென்னி தயாளின் ரசிகர்களும் அவருக்கு ஆதரவாக ஏகப்பட்ட கமெண்ட்டுகளை அவரது போஸ்ட்டுக்கு கீழே பதிவிட்டு வருகின்றனர். அவசரப்பட்டு இப்படியொரு முடிவை நீங்க அறிவித்து இருக்க வேண்டாம் சமூக வலைதளத்தில் டார்ச்சர் கொடுப்பது வாடிக்கையாகி விட்டது. ஒரு ஷோன்னா அப்படி இப்படித்தான் இருக்கும். அதற்காக ஒருத்தரை இந்த அளவுக்கு டார்கெட் செய்வது சரியல்ல என்றும் கூறியுள்ளனர்.

எங்களுக்காக வாங்க

எங்களுக்காக வாங்க

சூப்பர் சிங்கர் சீசன் 8 பத்தி நீங்க உங்களுக்கு தோன்றுவதை தாராளமாக சமூக வலைதளங்களில் பேசுங்கள்.. மேலும், அடுத்த சீசனுக்கு நிச்சயம் உங்களை நாங்கள் எதிர்பார்ப்போம். ஹேட்டர்களையும் ட்ரோல் செய்பவர்களையும் பொருட்படுத்தாதீங்க சார்.. எங்களுக்கா நீங்க வாங்க சார் என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் கோரிக்கை எழுந்து வருகின்றன.

முடிவை மாற்றுவாரா

முடிவை மாற்றுவாரா

தனது மனைவியின் ஆறுதல் மற்றும் ரசிகர்களின் அன்பு காரணமாக பாடகர் பென்னி தயாள் தனது அதிரடி முடிவை மாற்றிக் கொள்வாரா என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி உள்ளனர். விஜய் டிவி மற்றும் சூப்பர் சிங்கர் குழுவினர் உள்ளிட்டோரும் இந்த விவகாரம் தொடர்பாக பாடகர் பென்னி தயாள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓவரா போகுது

ஓவரா போகுது

சமூக வலைதளங்கள் கையில் இருப்பதால் ரசிகர்கள் யாரை வேண்டுமானாலும் கேள்வி எழுப்பலாம் என்கிற நிலை நல்லது தான் என்றாலும், என்டர்டெயின்மென்ட் ஆட்களிடம் எல்லை மீறியே நெட்டிசன்களின் நடவடிக்கை செல்வதாகவும் சோஷியல் மீடியா புல்லிங் தொடர்ந்து அதிகரித்து வருவது பலருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் அதிர்ச்சிகரமான தகவல்களும் குவிகின்றன. நெட்டிசன்களின் டார்ச்சர் காரணமாகவே இத்தனை நாட்கள் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வந்த பாடகர் பென்னி தயாள் இன்று இப்படி ஒரு முடிவை எடுக்க நேரிட்டுள்ளது என்றும் இந்த போக்கை நெட்டிசன்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X