அஜித் 'அவர்' காலில் விழுந்து யாருக்கும் தெரியாம அழுதார்..பெசன்ட் ரவி பேட்டி!

சென்னை : அஜித்தின் தந்தை நேற்று அதிகாலை உயிரிழந்த நிலையில், இறுதிச்சடங்கு முடியும் வரை அஜித்தின் நண்பரான பெசன்ட் ரவி உடனிருந்து அனைத்து பணிகளையும் கவனித்துக்கொண்டார்.

நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்த அஜித்தின் தந்தை இறந்த செய்தி இணையத்தில் வெளியானதை அடுத்து, ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும்,திரைப்பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

அஜித் தந்தையின் உடல் ஈசிஆரில் வீட்டில் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு பின் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

கூட்டாக அறிக்கை

கூட்டாக அறிக்கை

அஜித்தின் தந்தையின் திடீர் மறைவு குறித்து அஜித்தும், அவரது சகோதரர்களும் இணைந்து நேற்று கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க வேண்டும். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம் என அறிக்கை வெளியிட்டு இருந்தார்கள்.

பெசன்ட்நகரில் இறுதிச்சடங்கு

பெசன்ட்நகரில் இறுதிச்சடங்கு

இதையடுத்து, ஈசிஆர் வீட்டில் சடங்குகள் செய்யப்பட்டு, பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெற்றது.வேனில் எடுத்துவரப்பட்ட உடல் இடுகாட்டுக்கு வந்தவுடன் அஜித் மற்றும் அவரது சகோதரர்கள் தோளில் சுமந்து சென்றனர்.உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், பார்த்திபன், பிரசன்னா, ஏ.ஆர்.முருகதாஸ் என பல பிரபலங்கள் மயானத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

நெகிழ்ந்த ரசிகர்கள்

நெகிழ்ந்த ரசிகர்கள்

இதனால், பெசன்ட்நகர் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது, ஆனால் அஜித்துடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள பெசன்ட் ரவி இறுதிசடங்கில் அனைத்துப்பணிகளையும் முன் நின்று செய்தார். அஜித்தின் தாயார், அஜித்தின் மனைவி ஷாலினி என அனைவரையும் பாதுகாப்போடு கவனித்துக்கொண்டார். பெசன்ட் ரவியின் இந்த செயலைப் பார்த்த ரசிகர்கள் உண்மையில் நெகிழ்ந்து போனார்கள்.

அஜித்திடம் இருக்கும் நல்ல பண்பு

அஜித்திடம் இருக்கும் நல்ல பண்பு

யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பெசன்ட்நகர் ரவியிடம், அஜித் யார் காலில் விழுந்து வணங்கினார் என்று கேட்டனர். அவர், அப்பாவை கவனித்துக் கொண்ட மருத்துவர் என்றும், அவர் காலில் விழும் போது அஜித் கண்கலங்கி விட்டார் என்றார். மேலும், இறுதிச்சடங்கை முடித்துவிட்டு வெளியில் வந்ததும், அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள், போலீஸ் என ஒவ்வொவருக்கும் நன்றி கூறினார். உண்மையில் அஜித்திடம் இருக்கும் அந்த பண்பு தான் அவரை இந்த இடத்திற்கு கொண்டுவந்துள்ளது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X