twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வீட்டில் செம போர் அடிக்குதா? அப்போ இந்த படத்தை பாருங்க.. குழந்தைகள் ஸ்பெஷல்!

    |

    சென்னை : கொரோனா வைரஸ் நாட்டையே அச்சுறுத்தி வரும் நிலையில் , அதை கட்டு படுத்துவதற்காக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டுக்குள்ளேயே அடங்கி கிடக்கின்றனர்.

    Recommended Video

    Doordarshan Re telecasts Shaktimaan and Ramayana

    பெரியவர்கள் பலர் தனது அலுவலகபணிகளை வீட்டில் இருந்த படியே செய்து நேரம் கழிக்கின்றனர். ஆனால் குழந்தைகள் எவ்வாறு பொழுது போக்கில் ஈடுபடுவது என்று தெரியாமலும், வீட்டை விட்டு வெளியில் சென்றுகூட விளையாட முடியாமல் தவிக்கின்றனர் ....

    குழந்தைகளை என்டர்டைன் செய்யும் விதமாக சினிமாவில் பல திரைப்படங்கள் இருந்தாலும் அவற்றில் சிலவற்றை இப்போது பட்டியலிட்டு பார்ப்போம்..

    அமலா பால் நீங்க ரொம்ப அழகு.. வர்ணித்த மாஸ்டர் பட ஹீரோயின்.. வைரலாகும் இன்ஸ்டா பதிவு!அமலா பால் நீங்க ரொம்ப அழகு.. வர்ணித்த மாஸ்டர் பட ஹீரோயின்.. வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

     கிராபிக்ஸ் பாடல்

    கிராபிக்ஸ் பாடல்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,ஷாலினி,போன்ற பல பிரபலங்கள் நடித்து ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் சக்க போடு போட்டது. குழந்தைகளை மையமாக வைத்து வெளிவந்தது இந்த படம் அப்போது குழந்தைகளின் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் குழந்தைகளுக்கு பிடித்த கிராபிக்ஸ் பாடல் அதாவது ராஜா சின்ன ரோஜா என்ற பாடல் காட்சிகள் இடம்பெற்றிருப்பது கூடுதல் பலம்.

     அண்ணன், தங்கை பாசம்

    அண்ணன், தங்கை பாசம்

    இப்படத்தின் பெயரை கேட்டவுடன் அனைவரின் நினைவிற்கும் வருவது ஷாமிலி குழந்தை கதாபாத்திரம் தான். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் தேசிய விருதையும் , சிறந்த திரைப்படத்திற்கான பல விருதுகளை பெற்றது. இந்த படத்தில் கோடை விடுமுறையின் போது குழந்தைகள் செய்யும் அட்டகாசத்தையும், அண்ணன், தங்கை பாசத்தையும் நாம் நிச்சயம் மறந்து இருக்க மாட்டோம்.

     விலங்குகள் சேட்டை

    விலங்குகள் சேட்டை

    குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் யானை, நாய், குரங்கு என விலங்குகள் செய்யும் சேட்டை ரசிக்கும் படியாக இருக்கும். இந்த படத்தில் ஷாமிலி மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் நடித்து இருப்பார்கள். இந்த படமும் அந்த நேரத்தில் வெற்றி பெற்றது. இந்த படமும் குழந்தைகள் ரசிக்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     எலி அலப்பறை

    எலி அலப்பறை

    சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் தான் மான்ஸ்டர், இந்த படத்தில் கதாநாயகன் என்னமோ எஸ்.ஜே.சூர்யா தான், ஆனால் நம் மனதில் முழுக்க இடம் பெற்று இருந்தது அந்த மான்ஸ்டர் எலி தான். அந்த படத்தில் எலி செய்யும் அலப்பறை தாங்க முடியாது. இப்படி எல்லாம் நடக்குமா என்று கூட இருக்கும் ஆனால் குழந்தைகளை மிகவும் கவர்ந்த படங்களில் இந்த படமும் ஒன்று.

     பொழுதுபோக்கு படம்

    பொழுதுபோக்கு படம்

    இது போன்று பல திரைப்படங்கள் தமிழில் வெளிவந்துள்ளது. சமீப காலமாக அனிமேஷன் திரைப்படங்கள் பார்த்து பழகிப்போன குழந்தைகளுக்கு இந்த படம் பிடிக்குமா இல்லை பிடிக்காமல் போகுமா என்பது தெரியாது. ஆனால், அன்றைய தலைமுறையினருக்கு இந்த படங்கள் நிச்சயம் பிடிக்கும். ஒளிபரப்பினால் குழந்தைகள் பார்க்கிறார்களோ இல்லையே கட்டாயம் பெரியவர்கள் பார்ப்பார்கள். நிச்சயம் இது ஒரு பொழுது போக்கு படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

    English summary
    Here is the compilation of best kids movies to kill the time.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X