twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2017-ன் சிறந்த அறிமுக இயக்குநர் யார்..? #BestOfTamilCinema2017 #FilmibeatPolls

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    2017-ன் சிறந்த அறிமுக இயக்குனர் இவர் தான் !!- வீடியோ

    சென்னை : 'தமிழ் சினிமா 2017' எனும் தலைப்பில் வெவ்வேறு பிரிவுகளில் நம் தளத்தில் வாசகர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

    தமிழ் சினிமாவில் இந்த வருடத்தின் சிறந்த அறிமுக இயக்குநர் யார் எனும் கேள்விக்கு பலத்த போட்டி ஏற்பட்டது.

    முடிவில், ரசிகர்களின் ஆதரவைப் பெற்று 'அருவி' திரைப்படத்தின் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் 2017-ம் ஆண்டின் சிறந்த அறிமுக இயக்குநராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    தமிழ் சினிமா 2017

    தமிழ் சினிமா 2017

    2017-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல புதிய, இளம் இயக்குநர்கள் களம் இறங்கினர். புதிய களம், புதிய பார்வை, புதிய முயற்சிகள் என ட்ரெண்ட் செட்டராக உருவாகின அவர்கள் இயக்கிய படங்கள். அறிமுக இயக்குநர்களின் படங்கள் பல திரைப் பிரபலங்களாலும், விமர்சகர்களாலும் வெகுவாகப் பாராட்டப்பட்டன.

    சிறந்த அறிமுக இயக்குநர் 2017

    சிறந்த அறிமுக இயக்குநர் 2017

    கருத்துக்கணிப்பில் தேர்வு செய்யப்பட்ட ஆறு அறிமுக இயக்குநர்களில் 'அருவி' படத்தின் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் 36% வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்து மூன்று வருடங்கள் கடந்து, பல பிரச்னைகளுக்குப் பிறகு ரிலீஸான 'அருவி' படத்தை மக்கள் கொஞ்சினார்கள்; கொண்டாடினார்கள்.

    அறம் இயக்குநர்

    அறம் இயக்குநர்

    நயன்தாரா நடிப்பில் 'அறம்' படத்தை இயக்கிய கோபி நயினார் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். சமகால அரசியல், நிர்வாகத்தின் குறைபாடு எனப் பல விஷயங்களை யதார்த்தமாகப் பேசிய 'அறம்' படத்தின் மூலம் கோபி நயினார் கொடுத்திருப்பது செம மாஸ் என்ட்ரி. இந்த வருடம் 'அறம்' இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்கள் வெய்ட்டிங்.

    இயக்குநர் தனுஷ்

    இயக்குநர் தனுஷ்

    முன்னணி நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல அவதாரங்களை எடுத்த தனுஷ் கடந்த வருடம் எடுத்தது 'இயக்குநர் அவதாரம்'.'ப.பாண்டி' படத்தின் மூலம் அறிமுக இயக்குநராக நுழைந்தவர் ரசிகர்களின் பாராட்டையும் 18% வாக்குகளையும் பெற்று மூன்றாமிடத்தில் இருக்கிறார். நடிகராக ரசிகர்களைக் கவர்ந்திருந்த தனுஷ் இனி தொடர்ந்து இயக்குநராகவும் கலக்க இருக்கிறார்.

    மாநகரம் - குரங்கு பொம்மை - ஒரு கிடாயின் கருணை மனு

    மாநகரம் - குரங்கு பொம்மை - ஒரு கிடாயின் கருணை மனு

    'மாநகரம்' படத்தை இயக்கிய இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 4.48% வாக்குகளையும், 'குரங்கு பொம்மை' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நித்திலன் மற்றும் 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் கவனிக்கப்பட்ட சுரேஷ் சங்கையா ஆகிய இருவரும் தலா 3.36% வாக்குகளைப் பெற்று அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள்.

    பெரும் நம்பிக்கை

    பெரும் நம்பிக்கை

    அறிமுக இயக்குநர்களுக்கான தமிழ் சினிமா ரசிகர்களின் இந்த ஏகோபித்த வரவேற்பு, இனி வரும் வருடங்களிலும் புதியவர்களுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுக்கும். கடந்த ஆண்டு பாராட்டுதலுக்குரிய படங்களை எடுத்த இளம் இயக்குநர்களின் மீது, திரையுலக ரசிகர்கள் மத்தியில் இன்னும் நம்பிக்கை பெருகியிருக்கிறது.

    English summary
    In the opinion poll of our readers, there was a big competition for the question of who was the best debut director of the year 2017. Finally, Arun Prabhu Purushothaman, director of 'Aruvi', has been selected as the best debut director of the year 2017. 'Aramm' director Gopi Nainar got second place.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X