கோலிவுட் 2012: வெற்றிக் கொடி கட்டிய புது இயக்குநர்கள்!

By Shankar

கோடம்பாக்கத்துக்கு தினசரி நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இயக்குநராகும் கனவோடு கால்பதிக்கின்றனர்.

அதில் யாரோ ஒரு சிலருக்குதான் ஒரு படத்தில் எடுபிடியாகப் பணியாற்றும் அளவுக்காவது வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வாய்ப்பை அப்படியே பற்றிக் கொண்டு, உதவி இயக்குநராகி இயக்குநராக வருபவர்கள் ரொம்பக் குறைவு.

அப்படி இயக்குநர்களாக வந்தாலும் ஜெயிப்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.

81 புது இயக்குநர்கள்

2012-ம் ஆண்டு வெளியான படங்களில் பாதிக்கும் மேல் புதிய இயக்குநர்களால் உருவாக்கப்பட்டவைதான். அதாவது மொத்தம் 81 புதிய இயக்குநர்கள் அறிமுகமாகியுள்ளனர். இவர்கள் ஒரு டஜன் பேர்தான் வெற்றி பெற்றார்கள் அல்லது சொல்லிக் கொள்ளும் அளவுக்கு முதல் படத்தை எடுத்திருந்தார்கள்.

அவர்களில் முக்கியமானவர்களை இங்கே பார்க்கலாம்.

பாலாஜி மோகன் - காதலில் சொதப்புவது எப்படி

பாலாஜி மோகன் - காதலில் சொதப்புவது எப்படி

தனது 10 நிமிட குறும்படத்தை அழகாக, புத்திசாலித்தனமாக டெவலப் செய்து இரண்டரை மணி நேரப் படமாக்கி வெற்றி பெற்றார் பாலாஜி மோகன். அமலா பால், சித்தார்த் இருவருக்குமே இந்தப் படம் லைப் கொடுத்தது என்றால் மிகையல்ல.

எஸ் ஆர் பிரபாகரன் - சுந்தரபாண்டியன்

எஸ் ஆர் பிரபாகரன் - சுந்தரபாண்டியன்

இந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான சுந்தரபாண்டியன் படத்தை இயக்கி முத்திரைப் பதித்தவர் எஸ் ஆர் பிரபாகரன். சசிகுமார் - லட்சுமி மேனன் நடித்த இந்தப் படம் டிபிகல் சசிகுமார், சமுத்திரக்கனி பார்முலாவாக இருந்தாலும் ரசிக்கும்படி இருந்தது.

பீட்சா - கார்த்திக் சுப்புராஜ்

பீட்சா - கார்த்திக் சுப்புராஜ்

தமிழ் சினிமாவில் குறைந்த செலவில் வெளியான மிகச் சிறந்த த்ரில்லர் படம் என்ற பெருமை இன்த பீட்சாவுக்கு உண்டு. மிக நம்பிக்கை தரும் அறிமுக இயக்குநராகத் திகழ்கிறார்.

பாலாஜி தரணிதரன் - நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்

பாலாஜி தரணிதரன் - நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்

இந்த ஆண்டின் கடைசியில் வெளியாகி எல்லோரையும் அட என ஆச்சர்யப்பட வைத்த படம் இந்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்.

மணீஷ் பாபு - புதுமுகங்கள் தேவை

மணீஷ் பாபு - புதுமுகங்கள் தேவை

ரொம்ப சாதாரணமாகத்தான் ஆரம்பிக்கிறது இந்தப் படம். ஆனால் போகப் போக, சினிமாவுக்குள் ஒரு சினிமா, அதற்குள் இன்னொரு சினிமா என்ற புதிய பார்முலா, நம்மையுமறியாமல் ஈர்த்துவிடுகிறது. குறிப்பாக அந்த க்ளைமாக்ஸ்.

ரஞ்சித் - அட்டகத்தி

ரஞ்சித் - அட்டகத்தி

ஒவ்வொரு காட்சியிலும் நகைச்சுவை இழையோடும் வகையில் அட்டகத்தியை உருவாக்கியிருந்தார் ரஞ்சித். காட்சிகளை அவர் அமைத்திருந்த விதம், இந்த ஆண்டு இன்னொரு நல்ல படத்தை தருவார் என்ற உத்தரவாதத்தை கொடுத்தது.

கமலக் கண்ணன் - மதுபானக்கடை

கமலக் கண்ணன் - மதுபானக்கடை

2012-ம் ஆண்டு வெளியான குறிப்பிடத்தக்க படங்களில் இதுவும் ஒன்று. சின்ன பட்ஜெட். ஒரு டாஸ்மாக்தான் செட். ஆனால் அங்கே இயங்கும் தனி உலகத்தை இத்தனை துல்லியமாக யாரும் படமாக்கியதில்லை.

பிரகாஷ் ராஜ் - டோனி

பிரகாஷ் ராஜ் - டோனி

சினிமா இயக்கம் பிரகாஷ் ராஜிக்கு புதிதில்லை என்றாலும், தமிழில் அவர் இயக்குநராக அறிமுகமான முதல் படம் டோனி. ஒரு தேர்ந்த இயக்குநருக்குரிய முத்திரையை அழுத்தமாகப் பதித்திருந்தார்.

ஐஸ்வர்யா தனுஷ் - 3

ஐஸ்வர்யா தனுஷ் - 3

இவர்களைத் தவிர, கோழி கூவுது படம் தந்த கே ஐ ரஞ்சித்தும், அம்புலி படம் தந்த இரட்டையர் ஹரி சங்கர் - ஹரீஷ் நாராயணன், கழுகு படம் தந்த சத்யசிவா, 3 படம் தந்த ஐஸ்வர்யா தனுஷ், பச்சை என்கிற காத்து படம் எடுத்த கீரா, ராட்டினம் தந்த தங்கசாமி, பாகன் பட இயக்குநர் அஸ்லம் ஆகியவர்களும் இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அறிமுக இயக்குநர்களே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X