Bulbbul: இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த படம்.. அனுஷ்கா ஷர்மா படத்தை பாராட்டிய அனுராக் கஷ்யப்!
மும்பை: நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ள அனுஷ்கா ஷர்மாவின் Bulbbul படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் அனுராக் கஷ்யப்.
நடிகையும் விராத் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா, தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார்.
அனுஷ்கா ஷர்மா இணைந்து தயாரித்து இருக்கும் புல்புல் திரைப்படம் நெட்பிளிக்ஸில் கடந்த ஜூன் 24ம் தேதி வெளியாகி பலரது பாராட்டுக்களையும் அள்ளி வருகிறது.

அனுஷ்கா ஷர்மா படம்
அமேசான் பிரைமில் வெளியான பதால் லோக் வெப்சீரிஸ் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் தாண்டி ஓடிடி தளத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அடுத்ததாக அனுஷ்கா ஷர்மா தயாரிப்பில், அறிமுக இயக்குநரான அன்விதா தத் எனும் பெண் இயக்கியுள்ள இந்த புல்புல் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கிறது.

இரண்டாவது படம்
OTT தளத்தில் இம்மாதத்தில் வெளியாகும் இந்தி படமாக இந்த புல்புல் படம் அமைந்திருக்கிறது. அமிதாப் பச்சன் மற்றும் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான குலாபோ சித்தாபோ அமேசான் பிரைமில் வெளியான நிலையில், புல்புல் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி சக்கைப் போடு போடுகிறது.

ஒன் இன் எ மில்லினியம்
தமிழில் நூற்றாண்டின் ஆகச் சிறந்த படம் என்பது போல புல்புல் படத்தை ஒன் இன் எ மில்லினியம் என பாராட்டியுள்ளார் பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப். படத்தை பார்த்து முடித்த பிறகு, உடனே விஸ்கி அருந்தி விட்டு மீண்டும் படத்தை பார்த்தேன், ஒரு பேய் படம் எப்படி இப்படி ஒரு கவிதையாக தெரிகிறது என்றே தெரியவில்லை என்றார்.

அந்த லிஸ்டில்
புல்புல் படம் ஒன்றும் மிரட்டும் பேய் படம் அல்ல, ஆனால், ஒரு எச்சரிக்கை கொடுக்கும் கதை. எனக்கு பிடித்த வெகு சில படங்களான கோர்ட், ஃபாண்ட்ரி, சுப்பிரமணியபுரம், உடான், மசான், மக்தீ, தும்பட், லக் பை சான்ஸ், எஸ்.ஓ.டி., லையர்ஸ் டைஸ், அன்னயும் ரசூலும், கில்லா உள்ளிட்ட படங்களின் வரிசையில் புல்புல் படமும் இடம்பிடித்து விட்டது என்று பாராட்டியுள்ளார்.

அசத்திட்டீங்க
இந்த படத்தை இயக்கிய பெண் இயக்குநரான அன்விதா தத், தயாரித்த அனுஷ்கா ஷர்மா, இசையமைத்த அமித் த்ரிவேதி, ஒளிப்பதிவு செய்த சித்தார்த் திவான், நடிகர்களான த்ரிப்தி திம்ரி, அவினாஷ் திவாரி, பரம்பிரதா, ராகுல் போஸ் மற்றும் பவோலி டாம் ஆகியோரின் உழைப்பை பார்த்து அசத்திட்டீங்க என்றும் அனுராக் கஷ்யாப் கொண்டாடி உள்ளார்.


Click it and Unblock the Notifications











