For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இசை வாழும் வரை உயிர்த்திருக்கும் நா.முத்துக்குமார் #BestOfTamilCinema2017 #FilmibeatPolls

By Vignesh Selvaraj
|
சிறந்த பாடலாசிரியர் 2017

சென்னை : தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு சிறப்பான பங்களிப்பைச் செய்தவர்கள் யார் என தேர்ந்தெடுப்பதற்காக நமது தளத்தில் கருத்துக்கணிப்பு நடத்தினோம்.

வெவ்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்தக் கருத்துக்கணிப்பில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.

பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் 2017-ம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியராக நா.முத்துக்குமார் தேர்வு செய்யப்படுகிறார்.

சிறந்த பாடலாசிரியர் 2017

சிறந்த பாடலாசிரியர் 2017

ஆனந்த யாழை மீட்டிய முத்துக்குமார் கடந்த ஆண்டு இயற்றியது பேரன்பின் ஆதி ஊற்று. ராமின் தரமணி ஆல்பத்தில் தனித்துத் தெரிந்தார் முத்துக்குமார். 'யாரோ உச்சிக்கிளை மேலே..' என அதிரடித்து 'உன் பதில் வேண்டி' என உருகியது முதல் 'பாவங்களை சேர்த்துக்கொண்டு' என கலங்கவைத்தது வரை நா.முத்துக்குமார் ஆடியது ருத்ர தாண்டவம். ரசிகர்களின் ப்ளேலிஸ்ட்டை தனது பாடல்களின் மூலம் நிறைத்த கவிஞன் நா.முத்துக்குமாருக்கு அஞ்சலி.

நா.முத்துக்குமார்

நா.முத்துக்குமார்

56.54% பார்வையாளர்களின் ஆதரவைப் பெற்று 2017-ம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியராக தேர்வாகி இருக்கிறார் நா.முத்துக்குமார். 2016-ல் அமரராகிப் போன முத்துக்குமாரின் வரிகள் தமிழ் வாழும் வரை நிலைத்து நிற்கும். அவரது பாடல்கள் இசை வாழும் வரை உயிர்த்திருக்கும். ரசிகர்களின் தேர்வும் அதையே மெய்ப்பிக்கிறது.

மதன் கார்க்கி

மதன் கார்க்கி

உலக அரங்கில் பல வெற்றிச் சரித்திரம் படைத்த 'பாகுபலி'க்கு பாட்டெழுதி பெருமை சேர்த்தது கார்க்கியின் கீபோர்டு. இந்திய அளவில் மிக அதிகமாக ஸ்ட்ரீம் ஆகிக்கொண்டிருக்கும் பாடல்களுக்குச் சொந்தமான மதன் கார்க்கியின் வரிகளில் கடந்த ஆண்டு நிறைய பாடல்கள் வெளிவந்தன. அவற்றில் பெரும்பாலானவை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. அதற்காக, ரசிகர்கள் கொடுத்த வாக்குகள் 18.87%.

வைரமுத்து

வைரமுத்து

14.46% வாக்குகளுடன் மூன்றாம் இடம் பிடித்திருப்பது கவிப்பேரரசு வைரமுத்து. 'வான் வருவான்' என இளைஞர்களின் கீதமாக ஒலித்த பாடலை 'காற்று வெளியிடை' படத்துக்காக எழுதினார். 'சாரட்டு வண்டியில' என கும்மிப் பாட்டை ஆண்ட்ராய்டு போன்களில் ரிங்டோனாக மாற்றிய பெருமையும் வைரமுத்துவையே சேரும். இன்னும் இன்னும் இவரிடம் வைர வரிகளைக் கேட்கிறது தமிழ்ச் சமூகம்.

விவேக்

விவேக்

2016-ம் ஆண்டு கிட்டத்தட்ட இரண்டு டஜன் படங்களுக்கு பாடல் இயற்றிய விவேக்குக்கு கடந்த ஆண்டு கிடைத்த ஒற்றைப் புளியங்கொம்பு 'மெர்சல்'. விஜய் என்ட்ரிக்கு ஒரு பாடல், கெத்துக்கு ஒரு பாடல் என கலந்துகட்டி அடித்த விவேக் தளபதி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். மெலடி, பீட் என பிரித்து மேய்ந்த விவேக்குக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு மொத்த வாக்குகளில் 5.71%.

விவேகா

விவேகா

பாடலாசிரியர் விவேகாவின் வரிகளில் உருவாகி 'சரவணன் இருக்க பயமேன்' படத்தில் இடம்பெற்ற 'எம்புட்டு இருக்குது ஆச' பாடல் ரொமான்டிக் மெலடியாக ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. எந்த வகையான பாடல் என்றாலும், முத்திரை பதிக்கும் விவேகாவுக்கு வாசகர்கள் அளித்த வாக்குகள் 4.42%. இன்னும் பல பாடல்கள் இயற்றி ரசிகர்களின் அபிமானம் பெற வாழ்த்துவோம்.

English summary
We conducted a survey on different sections about tamil cinema 2017. Lyricist Na.Muthukumar selected as Best lyricist of Tamil Cinema 2017.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more