சிறந்த படங்கள் பட்டியலில் முதலிடம் நம்மதான்.. மெர்சலுக்கு எத்தனயாவது இடம் தெரியுமா?

By Vignesh Selvaraj

சென்னை : தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு 190-க்கும் அதிகமான படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த வருடம் முடிவடைவதற்குள் 200 படங்கள் வரை வெளியாகும் நிலை உருவாகியுள்ளது.

இதில் முக்கால்வாசிப் படங்கள் வெற்றிப் படங்கள் இல்லை என்றாலும் வெற்றிபெற்ற மற்றும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற சில படங்கள் வித்தியாசமான படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

சில வித்தியாசமான கதைக்களமும், திரைக்கதையும் கொண்ட படங்களால் தமிழ்த் திரையுலகம் இந்திய அளவில் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஐஎம்டிபி ரேட்டிங்

ஐஎம்டிபி ரேட்டிங்

திரைப்பட இணையதளமான ஐஎம்டிபி தளம் இந்த ஆண்டின் சிறந்த 10 படங்களை ரசிகர்களின் வாக்குகள் மூலம் தேர்வு செய்து அந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 6 தென்னிந்தியத் திரைப்படங்களும், 4 இந்தி படங்களும் இடம் பிடித்துள்ளன.

விக்ரம் வேதா

விக்ரம் வேதா

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த 'விக்ரம் வேதா' படம் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து இந்தியத் திரையுலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. பல இந்தி படங்களையும் பின்னுக்குத் தள்ளி 'விக்ரம் வேதா' முதலிடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி - இரண்டாவது இடம்

பாகுபலி - இரண்டாவது இடம்

பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா ஆகியோர் நடிப்பில் பல கோடி ரூபாய் செலவு செய்து பிரமாண்டமாக எடுத்து உலகம் முழுவதும் 1700 கோடி ரூபாய் வசூலித்த 'பாகுபலி 2' படம் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தையே பிடித்துள்ளது.

மெர்சல்

மெர்சல்

விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு மற்றும் பலர் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த 'மெர்சல்' படம் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் படம் சில சர்ச்சைகளால் இந்தியா முழுவதும் பரவியது குறிப்பிடத்தக்கது.

அர்ஜுன் ரெட்டி

அர்ஜுன் ரெட்டி

விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளிவந்து தென்னிந்திய ரசிகர்களின் கவனம் ஈர்த்த 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம் ஐஎம்டிபி ரேட்டிங்கில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் படம் விக்ரமின் மகன் துருவ் நடிக்க தமிழில் 'வர்மா' எனும் பெயரில் ரீமேக் ஆவது குறிப்பிடத்தக்கது.

ஐஎம்டிபி-யின் சிறந்த படங்கள் 2017

ஐஎம்டிபி-யின் சிறந்த படங்கள் 2017

ஐஎம்டிபி இணையதளம் சார்பில் ரசிகர்களின் வாக்குகளின் அடிப்படையில் தேர்வான டாப் டென் படங்கள் 2017 பட்டியல் கீழே...

1. விக்ரம் வேதா (தமிழ்) - நடிப்பு : விஜய் சேதுபதி, மாதவன்
2. பாகுபலி 2 (தெலுங்கு) - நடிப்பு : பிரபாஸ், அனுஷ்கா, ராணா
3. அர்ஜுன் ரெட்டி (தெலுங்கு) - நடிப்பு : விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே
4. சீக்ரெட் சூப்பர் ஸ்டார் (ஹிந்தி) - நடிப்பு : சாய்ரா வாசிம்
5. ஹிந்தி மீடியம் (ஹிந்தி) - நடிப்பு : இர்ஃபான் கான் சபா கொமர்
6. தி காஸி அட்டாக் (தெலுங்கு) - நடிப்பு : ராணா
7. டாய்லெட் - ஏக் பிரேம் கதா (ஹிந்தி) - நடிப்பு : அக்‌ஷய் குமார்
8. ஜாலி எல்எல்பி 2 (ஹிந்தி) - நடிப்பு : அக்‌ஷய் குமார், ஹூமா குரேஷி
9. மெர்சல் (தமிழ்) - நடிப்பு : விஜய், சமந்தா, காஜல் அகர்வால்
10. தி காட் ஃபாதர் (மலையாளம்) - நடிப்பு : மம்முட்டி, ஸ்நேகா

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X