Don't Miss!
- Lifestyle
பலவீனமான சிறுநீரகங்களை வலுவாக்க வேண்டுமா? இதோ அதற்கான சில எளிய இயற்கை வழிகள்!
- News
தினசரி ரூ.2000, மாதம் ரூ.62,500 சம்பாதித்தால் வரி இல்லை.. பட்ஜெட்டில் சொன்ன முக்கிய விஷயமே இதுதான்!
- Finance
1 அல்ல 2 இல்ல.. 35000 கோடி..! பட்ஜெட் 2023 அறிவிப்பால் கஜானாவில் ஓட்டை.. எந்த அறிவிப்பு..?!
- Automobiles
நேபாளத்தில் நம்ம ஊர் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்!! விலைகளை மட்டும் பார்த்துடாதீங்க... இங்கு எவ்வளவோ பரவாயில்லை
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
2022ல் காக்கிச் சட்டையில் கலக்கிய கோலிவுட் ஹீரோக்கள்... அஜித் தான் மாஸ்... இது ரசிகர்கள் தீர்ப்பு!
சென்னை: 2022ம் ஆண்டில் கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகின.
விக்ரம், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் ரசிகர்களின் வரவேற்போடு பிரம்மாண்ட வெற்றிப் பெற்றன.
இந்நிலையில் இந்தாண்டில் வெளியான சிறந்த போலீஸ் திரைப்படங்களை ரசிகர்களின் பார்வையில் தற்போது பார்க்கலாம்.
ராசாத்தி..
என்
ஆசை
ராசாத்தி..
அஜித்
டான்ஸை
ட்ரோல்
செய்யும்
விஜய்
ரசிகர்கள்..
ஃபேன்
மேடே
பெட்டராம்!

இந்தாண்டில் போலீஸ் திரைப்படங்கள்
ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. இதில் ஒவ்வொரு ஜானருக்கும் தனித்தனியே ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆனால், எப்போதும் எல்லா தரப்பு ரசிகர்களாலும் அதிகம் பார்க்கப்படுவது போலீஸ் திரைப்படங்கள் தான். காவல்துறையை பின்னணியாக வைத்து ஆக்சனாகவும் க்ரைம் திரில்லராகவும் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. அதன்படி, இந்தாண்டில் அஜித்தின் வலிமை, கார்த்தியின் சர்தார், விஜய் சேதுபதியின் டிஎஸ்பி உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன்.

டாப்பில் அஜித்தின் வலிமை
இந்த லிஸ்ட்டில் இந்தாண்டில் வெளியான மிகச் சிறந்த போலீஸ் திரைப்படமாக ரசிகர்கள் வலிமை படத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். அஜித் போலீஸ் ஆபிஸராக நடித்த இந்தப் படத்தை ஆக்சன் ஜானரில் ஹெச் வினோத் இயக்கியிருந்தார். கடந்த பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. நெகட்டிவான விமர்சனங்கள் இருந்தாலும் அஜித்தின் மேனரிசம், பைக் ஸ்டண்ட்ஸ் போன்றவற்றால் சூப்பர் ஹிட் அடித்தது வலிமை. மொத்தமாக ரசிகர்களின் தீர்ப்பில் வலிமை தான் இந்தாண்டின் சிறந்த போலீஸ் படமாக தேர்வாகியுள்ளது.

கார்த்தியின் சர்தார் இரண்டாவது இடம்
இந்த வரிசையில் கார்த்தியின் சர்தார் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் முழுக்க முழுக்க போலீஸ் படம் என சொல்ல முடியாது என்றாலும், கார்த்தியின் போலீஸ் கெட்டப் ரசிகர்களிடம் ரீச் ஆகிவிட்டது. போலீஸ், ரா ஆபிஸர் என இரட்டை வேடங்களில் நடித்து மாஸ் காட்டினார் கார்த்தி. அதுமட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாயை தட்டித் தூக்கியது சர்தார்.

டாணாக்காரன், நெஞ்சுக்கு நீதி,
அதேபோல், மக்களின் மனதை கவர்ந்த நேர்மையான போலீஸ் திரைப்படம் என்ற பெருமையை 'டாணாக்காரன்' தட்டிச் சென்றுள்ள்து. தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம், நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியானது. ஓடிடி ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்ற டாணாக்காரன் தான், இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது இந்தியில் வெளியான ஆர்டிகில் 15 படத்தின் தமிழ் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி என்பது குறிப்பிடத்தக்கது.

டைரி, தி வாரியர்
அருள்நிதி நடித்த டைரி திரைப்ப்டமும் சிறந்த போலீஸ் படங்களின் வரிசையில் இணைகிறது. இன்னாசி பாண்டியன் இயக்கிய இந்தப் படம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் மிரட்டலாக உருவாகி இருந்தது. தியேட்டர்களில் வெளியான டைரி அருள்நிதிக்கு சூப்பர் கம்பேக் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், லிங்குசாமி இயக்கத்தில் வெளியான 'தி வாரியர்' போலீஸ் படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ராம் பொதினேனி, கிருத்தி ஷெட்டி நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸான தி வாரியர் ஜஸ்ட் பாஸ் கேட்டகரியில் இணைந்தது.

மொக்கை வாங்கிய சினம், டிஎஸ்பி
2022ல் அருண் விஜய்யின் சினம், விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படங்களுக்கு எதிகம் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த இரண்டு படங்களுமே மோசமான கதை, திரைக்கதை, மேக்கிங் போன்றவற்றால் படுதோல்வியடைந்தன. இதனடிப்படையில் இந்தாண்டு வெளியான சிறந்த போலீஸ் திரைப்படங்களில் வலிமை, சர்தார் மட்டுமே ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளன.