சோனி நிறுவனம் அறிவித்த சாங் ஆப் தி இயர்.. எந்த பாடல் தெரியுமா ?

சென்னை : சோனி நிறுவனம் 2019ஆண்டின் சிறந்த பாடலாக பிகில் படத்தின் மெகா ஹிட்டான சிங்கபெண்னே பாடலை தேர்ந்தெடுத்து உள்ளது . பல தனியார் தொலைக்காட்சிகளும் கூட சிங்கபெண்ணே பாடலையே சிறந்த பாடலாக தேர்வு செய்துள்ளனர்.

2019ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கும் அதில் பெரும் பங்கு வகிக்கும் இசையமைப்பாளர்களுக்கும் மிக முக்கியமான வருடம் . இந்த வருடத்தில் பல முக்கிய படங்கள் வெளியாகியது அதை விட இந்த ஆண்டில் வெளியான நல்ல பாடல்களை யாரும் மறந்திருக்க மாட்டோம். சிறு குட்டிகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குதூகல படுத்திய பாடல்கள் முதல் பலரை உணர்வு பூர்வமாக தாக்கிய பாடல்களும் அதிகம் .

Best song of the year for 2019

பாடல்களின் அதிக படியான ரைட்ஸை தன் வசம் வைத்திருக்கும் இசை நிறுவனமான சோனி நிறுவனம். தற்போது இந்த ஆண்டின் சாங் ஆப் தி இயரை அறிவித்துள்ளது . பல இசை நிறுவனங்களும் இந்த ஆண்டில் வந்த சிறந்த பாடல்களை தற்போது ரிவைண்ட் செய்து பகிர்ந்து வருகின்றனர். இதனை அடுத்து பிரபல இசை நிறுவனம் சோனியும் 2019ஆண்டின் சிறந்த பாடலாக பிகில் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்து மெகா ஹிட்டான சிங்கபெண்னே பாடலை தேர்ந்தெடுத்து உள்ளது .

சோனி நிறுவனத்தால் சிங்கபெண்னே பாடல் தேர்ந்தெடுக்கபட்டது ஆச்சரியம் ஒன்றும் இல்லை ஏனெனில் இந்த ஆண்டில் வெளியான பல வெற்றி பாடல்களில் முக்கியமானது சிங்கபெண்ணே பாடல். அனைவரின் மனம்கவர்ந்த பாடலும் இதுதான். பெண்களின் வீரம் பற்றியும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த பாடல் இருக்கும். இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதி இருந்தார் .

Best song of the year for 2019

ரசிகர்கள் பலரும் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர் .சோனி நிறுவனத்தை தாண்டி பல தனியார் தொலைகாட்சிகளும் கூட சிங்கபெண்ணே பாடலையே சிறந்த பாடலாக தேர்வாக்கி உள்ளது .

சிங்கபெண்ணே பாடலை சிறப்பிக்கும் நோக்கில் இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்து இருப்பது படக்குழுவையும் மகிழ்வித்துள்ளது . சிங்கபெண்ணே பாடல் யூடியூப்பில் 30 மில்வியன் பார்வையாளர்களை எட்டி உள்ளது அஃதாவது 3கோடிக்கும் அதிகமான பேர் இந்த பாடலை பார்வையிட்டுள்ளனர் .

அட்லி விஜய் ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் ஆளப்போறான் தமிழன் பாடலுக்கு அடுத்து வெளியாகி வெற்றி கண்ட பாடல் இந்த சிங்கபெண்ணே பாடலாகும் . இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமானே முன்னிலையில் நின்று பாடியிருப்பார் அதனை தாண்டி படத்தில் இந்த பாடலின் போது ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அட்லி தோன்றி ரசிகர்களுக்கு அதிர்ச்சி விருந்து அளித்து இருப்பார்கள் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X