twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆளவந்தான் முதல் அசுரன் வரை.. தமிழ் சினிமாவில் நாவலை மையமாக வைத்து வெளியான திரைப்படங்கள்!

    |

    சென்னை: உலக புத்தக தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இயல் இல்லாமல் இசையும் நாடகமும் இல்லை.

    Recommended Video

    Ken Karunas 19th Birthday celebration | Chidambharam | Lock Down Diaries

    நாவல்களை தழுவி இயக்கப்படும் படங்கள் பல விருது மேடைகளை அலங்கரித்து வருகின்றன.

    உலகளவில் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற ஹாரி பாட்டர் படமும் ஜே.கே. ரவ்லிங் எழுதிய புத்தகத்தில் இருந்தே உருவாக்கப்பட்டது.

    விஜய்க்கு தாராள மனசு.. உதவியால் சந்தோஷப்பட்ட முதல்வர்.. வீடியோ வெளியிட்டு பெருமிதம்!விஜய்க்கு தாராள மனசு.. உதவியால் சந்தோஷப்பட்ட முதல்வர்.. வீடியோ வெளியிட்டு பெருமிதம்!

    இயல், இசை, நாடகம் மூன்றும் சங்கமிக்கும் தமிழ் மொழியில், நாவலை மையமாக வைத்து வெளியான சில திரைப்படங்கள் குறித்து இங்கே காண்போம்.

    புத்தகம் வாசிக்க வேண்டும்

    புத்தகம் வாசிக்க வேண்டும்

    நல்ல திரைப்படத்தை இயக்க வேண்டும் என்றால், புத்தகம் வாசிக்கும் பழக்கம் நிச்சயம் இயக்குநர்களுக்கு இருக்க வேண்டும் என பல மாமேதைகள் கூறியுள்ளனர். ஆனால், தமிழ் சினிமாவில் நாவல்களை படமாக மாற்ற சில இயக்குநர்களே முனைப்பு காட்டி வருகின்றனர். பலரும் காசு பார்க்கும் கமர்ஷியலை நோக்கி நகர்வது, ஆரோக்கியமான சினிமாவை வழங்குவதில் தடை கல்லாக மாறி நிற்கும்.

    ஆளவந்தான்

    ஆளவந்தான்

    உலக நாயகன் கமல்ஹாசன் இயக்கத்தில் வெளிவந்த ஆளவந்தான் படமும் ஒரு நாவலைத் தழுவித் தான் எடுக்கப்பட்டது. கமல்ஹாசன் எழுத்தில் உருவான தாயம் என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு தான் அந்த படம் இயக்கப்பட்டது. ஹாலிவுட் இயக்குநர் குவெண்டின் டரன்டினோ இயக்கத்தில் வெளியான கில் பில் படம் ஆளவந்தானை இன்ஸ்பயராக கொண்டு உருவானது பலரும் அறிந்த ஒன்றே.

    தில்லானா மோகனாம்பாள்

    தில்லானா மோகனாம்பாள்

    கொத்தமங்களம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் எனும் நாவல், அதே பெயரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி நடிப்பில் திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 1968ம் ஆண்டு திரைக்கு வந்த இந்த படத்தை ஏ.பி. நாகராஜன் தயாரித்து இயக்கி இருந்தார். சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    சில நேரங்களில் சில மனிதர்கள்

    சில நேரங்களில் சில மனிதர்கள்

    பிரபல எழுத்தாளரான ஜெயகாந்தன் கைவண்ணத்தில் வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள் எனும் நாவல், அதே பெயரில், 1976ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி இயக்குநர் பீம் சிங் இயக்கத்தில் திரைப்படமாக வெளியானது. லக்‌ஷ்மி, ஸ்ரீகாந்த், நாகேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் அந்த படத்தில் நடித்திருந்தனர்.

    விசாரணை

    விசாரணை

    கலை நயத்துடன் இருந்த சினிமா உலகில் கமர்ஷியல் புகுந்த பின்னர், நாவல்கள் படமாக்கப்படுவது குறைந்து போய் விட்டது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை திரைப்படம் ஆட்டோ சந்திரன் எழுதிய லாக்கப் நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு தேசிய விருதை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

    அசுரன்

    அசுரன்

    விசாரணை படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படமும் நாவலை தழுவியே எடுக்கப்பட்ட திரைப்படம் தான். எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலே அசுரனாக பிரதிபலித்தது. செருப்பு அணியாத கால்களின் வலிகளையும், மகனை காப்பாற்ற போராடும் தந்தை சிவசாமியின் அன்பையும் ஜனங்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது.

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    அமரர் கல்கி எழுதிய புனைவு நாவலான பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க எம்.ஜி.ஆர்., கமல், பாரதிராஜா என பலரும் முயற்சி செய்தனர். இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம், பொன்னியின் செல்வன் என்கிற தலைப்பிலேயே விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் என நட்சத்திர பட்டாளத்துடன் அந்த படத்தை இயக்கி வருகிறார்.

    English summary
    Most of the Tamil films created based on novels earlier. The stories were prevalent to the reader, and then movies have also been simplified, which adapted from books. Here we tried to make a list of most popular novels which turn into a film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X