twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெஸ்டிகளை கொண்டாடிய தமிழ்த் திரைப்படங்கள்: உங்க மைண்ட் வாய்ஸ்ல என்ன படங்கள் இருக்குன்னு சொல்லவா?

    |

    சென்னை: தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

    Recommended Video

    Thiruchitrambalam Public Review | Thiruchitrambalam Review | Thiruchitrambalam | Dhanush | *Review

    மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இத்திரைப்படத்தில் தனுஷ் - நித்யா மேனன் இருவருக்குமான ப்ரெண்ட்ஷிப் காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

    டிக்கெட் கட்டணம் உயர்வு, 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் ரிலீஸ்: தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கைடிக்கெட் கட்டணம் உயர்வு, 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் ரிலீஸ்: தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை

    ரசிகர்கள் கொண்டாடிய திருச்சிற்றம்பலம்

    ரசிகர்கள் கொண்டாடிய திருச்சிற்றம்பலம்

    'கர்ணன்' படத்திற்கு பிறகு தனுஷின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது 'திருச்சிற்றம்பலம்.' இதற்கு முன்னதாக தனுஷ் நடித்திருந்த ஜகமே தந்திரம், மாறன், இந்தியில் அத்ரங்கி ரே, ஹாலிவுட்டில் தி கிரே மேன் ஆகிய படங்கள், நேரடியாக ஓடிடியில் வெளியாகின. இந்நிலையில், திரையரங்குகளில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    தனுஷ் – நித்யா மேனன் - பெஸ்டி

    தனுஷ் – நித்யா மேனன் - பெஸ்டி

    'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷுடன் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். அதிரடி ஆக்சன் காட்சிகளெல்லாம் இல்லாமல், ரொம்பவே இயல்பான திரைக்கதையோடு உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் தனுஷ், நித்யா மேனனின் காட்சிகள், ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. இருவரும் நெருங்கிய நண்பர்களாக, அதாவது பெஸ்டிகளாக நடித்து அட்ராசிட்டி செய்துள்ளனர். இவர்களை திரையில் பார்க்கும் ரசிகர்கள், "நமக்கும் இப்படி ஒரு பெஸ்டி இருந்தால் எப்படி இருக்கும்" என கனவுலகில் மிதக்கும் அளவிற்கு, செம்மையாக ஸ்கோர் செய்துள்ளனர்.

    பெஸ்டிகளின் முன்னோடி விக்ரமன்

    பெஸ்டிகளின் முன்னோடி விக்ரமன்

    'திருச்சிற்றம்பலம்' படத்தில் வரும் தனுஷ் - நித்யா மேனன் பெஸ்டி ஜோடிகளைப் போல, தமிழில் ஏற்கனவே சில பெஸ்டி திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற படங்களுக்கு முன்னோடியாக இயக்குநர் விக்ரமனை குறிப்பிடலாம். 1990ல் விக்ரம் இயக்கத்தில் முரளி, ஆனந்த் பாபு, ராஜா, சார்லி, சித்தாரா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'புது வசந்தம்.' இதில், நான்கு நண்பர்களுடன் சித்தாராவும் ஒரே வீட்டில் தங்கியிருப்பார். இவர்கள் அனைவருமே நண்பர்களாக இருப்பார்கள். ஆண் - பெண் நட்பின் மகத்துவத்தை ரொம்பவே நேர்மையாக வெளிக்காட்டிய புது வசந்தம், 90ஸ் கிட்ஸ்களால் கொண்டாப்பட்டது. கூடவே எஸ்.ஏ. ராஜ்குமாரின் இசையில், பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன.

    புதுப்புது அர்த்தங்கள்

    புதுப்புது அர்த்தங்கள்

    அதேபோல் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளியான புதுப்புது அர்த்தங்கள் திரைப்படம், பெஸ்டியை புதுமையான சூழலில் விவரித்தது. ரஹ்மான், கீதா, சித்தாரா, விவேக், ஜனகராஜ் நடித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். சீதாவை காதலித்து திருமணம் செய்துவிடுவார் ரஹ்மான். ஆனால், அதற்கு பின்னர் ரஹ்மானுக்கும் சித்தாராவுக்கும் இடையே நட்பு உருவாகும். கண்ணியமான முறையில் பெஸ்டியை உணர வைத்த இப்படமும் 90ஸ் கிட்ஸ்களால் கொண்டாடப்பட்டது.

    2கே கிட்ஸ்களுக்கு தரமான படங்கள்

    2கே கிட்ஸ்களுக்கு தரமான படங்கள்

    பெஸ்டியை மையமாக வைத்து வெளியான மேலும் சில படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்றன. 2001ல் விஜய் - பூமிகா நடிப்பில் வெளியான 'பத்ரி' பெஸ்டிகளின் ஆல் டைம் ஃபேவரைட் படமாக அமைந்தது. விஜய்க்கும் பூமிகாவுக்கும் இடையில் இருக்கும் அந்த நட்பு, ரசிகர்களையும் சிலிர்க்க வைத்தது. அதேபோல், பிரசாந்த், ஷாலினி நடிப்பில் வெளியான 'பிரியாத வரம் வேண்டும்' திரைப்படமும், ரசிகர்களை கட்டிப் போட்டது. பிரசாத்தும் ஷாலினியும் நண்பர்களாக அசத்தியிருப்பார்கள்.

    அஜித் – ஜோதிகா காம்போவில் பெஸ்டி

    அஜித் – ஜோதிகா காம்போவில் பெஸ்டி

    அஜித் நடித்திருந்த பூவெல்லாம் உன் வாசம் திரைப்படம், குடும்பப் பின்னணியில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருப்பார் எழில். இரு குடும்பங்களுக்குள் இருக்கும் நட்பு, அஜித் - ஜோதிகா இருவரிடமும் தொடரும். இருவருமே ஒருவருக்கொருவர் பெஸ்ட்டான பெஸ்டிகளாக நடித்திருந்தனர். இத்திரைப்படமும் 2கே கிட்ஸ்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.

    ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

    ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

    சேரன் இயக்கத்தில் 2004ல் வெளியான 'ஆட்டோகிராப்' திரைப்படத்தை கிளாசிக் வகைகளில் ஒன்றாக குறிப்பிடலாம். விடலைப் பருவ காதலில் இருந்து கல்லூரிக் காதல் வரை பயணிக்கும் இந்தப் படத்தின் கதை, சேரன் - சினேகா இருவருக்குமான நட்பில் முழுமையடையும். ஆட்டோகிராப் படம் வெளியான போது, சினேகா போன்ற ஒரு தோழி தனக்கும் கிடைத்திட வேண்டும் என, ஒவ்வொரு இளைஞர்களும் ஏக்கத்துடன் அழைந்தனர். நட்பை உன்னதமாக கொண்டாடியது ஆட்டோகிராப்.

    இனி உங்கள் விருப்பம்

    இனி உங்கள் விருப்பம்

    தமிழ் சினிமாவில் காதலை தவிர நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவான திரைப்படங்கள், மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளன. அப்படி, ஆண் - பெண் நட்பையும் பின்னணியாகக் கொண்டு வெளியான படங்கள், ரசிகர்களின் மனதில் புதைந்து கிடந்த பல பசுமையான நினைவுகளை வெளிக்கொண்டு வரும். இப்போது தனுஷின் திருச்சிற்றம்பலம் படமும் அப்படியொரு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புது வசந்தம் முதல் திருச்சிற்றம்பலம் வரை உங்களின் சிறந்த பெஸ்டி திரைப்படம் எது என்பதை, நீங்களே முடிவு செய்யலாம். அதை உங்கள் பெஸ்டிக்கே டெடிக்கேட் செய்து மகிழுங்கள்.

    English summary
    The friendship between Dhanush and Nithya Menon in Thiruchitrambalam is celebrated by the fans. Let's look at the Tamil movies made with such besties as the background( திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் – நித்யாமேனன் இருவருக்கும் இடையேயான நட்பு ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதுபோன்ற பெஸ்டிகளை பின்னணியாகக் கொண்டு உருவான தமிழ்த் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் )
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X