twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜேம்ஸ் பாண்டே இனி நம்ம ஜெஃப் பெசாஸ் பாக்கெட்டுக்குள்ளத் தான்.. எம்.ஜி.எம்மை கைப்பற்றிய அமேசான்!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகின் பழம்பெரும் சினிமா தயாரிப்பு நிறுவனமான எம்ஜிஎம் ஸ்டூடியோவை 8.45 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அமேசான் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

    உலகளவில் பிரபலமான ஜேம்ஸ் பாண்ட்களை தயாரித்து வந்த மெட்ரோ கோல்ட்வின் மேயர் எனும் எம்ஜிஎம் தயாரிப்பு நிறுவனத்தை புதன்கிழமை அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் வாங்க உள்ளார்.

    நெட்பிளிக்ஸ் மற்றும் டிஸ்னி ஹாட் ஸ்டார் உள்ளிட்ட உலகின் முன்னணி ஒடிடி நிறுவனங்களுக்கு கடும் போட்டியை கொடுக்க இந்த முன்னெடுப்பை அமேசான் செய்துள்ளது.

    97 ஆண்டுகள் பழமை

    97 ஆண்டுகள் பழமை

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 1924ம் ஆண்டு மார்கஸ் லோவி மற்றும் லூயிஸ் பி மேயரால் தொடங்கப்பட்ட நிறுவனம் எம்ஜிஎம். 97 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏகப்பட்ட தனிச்சிறப்புகள் உள்ளன. கர்ஜிக்கும் சிங்க தலையுடன் படம் ஆரம்பித்தாலே அந்த படம் ஹிட் தான் என ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள்.

    ஜேம்ஸ் பாண்ட் படங்கள்

    ஜேம்ஸ் பாண்ட் படங்கள்

    ஆரம்பத்தில் பேசும் படங்களை தயாரித்து வந்த இந்த ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் உலகளவில் ரசிகர்களை ஈர்த்த ஏகப்பட்ட ஜேம்ஸ் பாண்ட் படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வந்தது. அமேசான் நிறுவனம் தற்போது எம்ஜிஎம் நிறுவனத்தை கைப்பற்றி உள்ள நிலையில், ஜேம்ஸ் பாண்ட் படங்களை இனி அமேசான் பிரைமிலே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.

    பல ஆயிரம் கோடி

    பல ஆயிரம் கோடி

    கடந்த புதனன்று சுமார் 8.45 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுத்து எம்ஜிஎம் ஸ்டூடியோஸை அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் வாங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்திய மதிப்பில் சுமார் 60 ஆயிரம் கோடி என இது கணக்கிடப்படுகிறது. எம்ஜிஎமை அமேசான் கைப்பற்றிய நிலையில், ஏகப்பட்ட மீம்களும் ஹாஷ்டேக்குகளும் டிரெண்டாகி வருகின்றன.

    கடும் போட்டி

    கடும் போட்டி

    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் காரணமாக ஒடிடி தளங்கள் நல்ல வருமானத்தை ஈட்டி வருகின்றன. நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் விதமாக அமேசான் நிறுவனம் இந்த பெரிய டீலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பெசாஸ்.. ஜேம்ஸ் பெசாஸ்

    பெசாஸ்.. ஜேம்ஸ் பெசாஸ்

    மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தி நேம் இஸ் பெசாஸ்.. ஜேம்ஸ் பெசாஸ் என ஜெஃப் பெசாஸ் பாக்கெட்டில் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்தது குறித்து போட்ட ட்வீட்டும் செம வைரல் ஆகி வருகிறது.

    சிங்கத் தலைக்கு பதில்

    சிங்கத் தலைக்கு பதில்

    எம்ஜிஎம் தயாரிப்பு நிறுவன லோகோவான சிங்கத் தலைக்கு பதிலாக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸின் தலையை வைத்து ஏகப்பட்ட மீம்களை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், 8.45 பில்லியன் டாலரை 007 ஆக மாற்றி ஜெஃப் பெசாஸை புதிய ஜேம்ஸ் பாண்டாகவும் அறிவித்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

    English summary
    Amazon buys a popular Hollywood studio MGM for a whopping amount $8.45 billion. Hereafter Amazon Prime subscribers will watch James Bond movies in Amazon Prime.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X