twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பகவத் கீதையை பற்றி தவறாக பேசினேனா?: விஜய் சேதுபதி விளக்கம்

    By Siva
    |

    Recommended Video

    Vishal about Anisha Reddy: அனிஷா பற்றி விஷால் அளித்த பேட்டி- வீடியோ

    சென்னை: பகவத் கீதை குறித்து தான் எந்த ஒரு விமர்சனமும் செய்யவில்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

    சில தொலைக்காட்சி சேனல்களின் லோகோ போன்றே போலியாக வைத்து ட்வீட் செய்பவர்கள் அதிகம். அதில் யாரோ ஒரு செய்தி சேனலின் லோகோவை பயன்படுத்தி விஜய் சேதுபதிக்கு பிரச்சனையை ஏற்படுத்திவிட்டனர்.

    Bhagavad Gita issue: Vijay Sethupathi clears the air

    'பகவத் கீதை' ஒன்றும் புனித நூல் கிடையாது. இன்றைய சீரழிவுக்கு இது போன்ற கற்பனையால் உருவாக்கப்பட்ட நூல்களே காரணம் என்று விஜய் சேதுபதி கூறியதாக ஒரு செய்தி சேனல் செய்தி வெளியிட்டது போன்று ட்விட் செய்தனர். ஆனால் அதை பார்த்தவர்கள் ஒரு செய்தி சேனலே வெளியிட்டதால் உண்மை என்று நம்பி விஜய் சேதுபதியை விமர்சிக்கத் துவங்கிவிட்டனர்.

    இதை பார்த்த விஜய் சேதுபதி ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது,

    என் அன்பிற்குரிய மக்களுக்கு
    பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலை பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை
    பேசவும் மாட்டேன்
    சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது
    எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

    சிலர் விஜய் சேதுபதியை விமர்சித்தபோதிலும் அவர் அப்படி பேசுபவர் இல்லை என்பது பலருக்கும் தெரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Vijay Sethupathi has explained that he never ever criticised any holy books.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X