விஜய்யின் வளர்ச்சி எதிர்பார்க்காத ஒன்று.. அவர் ஒரு ரோல் மாடல்.. இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பேட்டி!

சென்னை: தளபதி விஜய்யை வைத்து 3 கமர்ஷியல் படத்தை இயக்கிய இயக்குநர் ஏ.வெங்கடேஷ் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், விஜய்யின் வளர்ச்சி எப்படிப்பட்டது என்பது இந்த உலகத்துக்கே தெரியும். இந்த வளர்ச்சியை யாரும் எதிர்பார்க்கவில்லை. மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் அன்பு சாதாரணமானது இல்லை என்றார்.

என்னுடைய முதல் படமான மகாபிரபு பார்த்து தான் விஜய் என்னுடன் படம் பண்ணலாம் என அழைத்தார். நானும் அவருக்கு காதல் கதை ஒன்றை சொன்னேன். ஆனால், எஸ்.ஏ.சந்திரசேகர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அப்ப விஜய்க்கு இருந்த சூழலை வைத்து கதை யோசித்தால் வரவில்லை. அதன்பின்னர் எஸ்.ஏ.சந்திரசேகர் உதவியாளரான தமிழன் பட இயக்குநர் மஜீத் ஒரு கதை சொன்னார். அந்த படம் தான் செல்வா.

Vijay GOAT

இயக்குநர் ஏ வெங்கடேஷ்: அதன் பிறகு தான், நான் தளபதியை வைத்து பகவதி படத்தை எடுத்தேன். படம் எடுக்கும் போது சில காட்சிகளை எல்லாம் பார்த்துவிட்டு எடிட்டரே வேண்டாம் சார் ரொம்ப ஓவராக இருக்கு கட் பண்ணிவிடலாம் என்றார், இல்ல இருக்கட்டும் ஓவர் தான் இருந்தாலும் மக்கள் ரசிப்பார்கள் என்றேன். விஜய் கூட சார் இது சரியா வருமா என்று கேட்டுக்கொண்டே இருந்தார். அப்போது நான் தைரியமா நடிங்க, இந்த படம் நிச்சயம் ஒரு மாஸ் ஹீரோ என்கிற இடத்தை உங்களுக்கு கொடுக்கும் என்றேன்.

கமர்ஷியல் படம்: நான் சொன்னது போலவே மக்கள் பகவதி படத்தை ரசித்தார்கள். அந்த படம் வெற்றிப்பெற்றது. இந்த படத்திற்கு பிறகு விஜய், கமிர்ஷியல் படத்தில்தான் நடிப்பார் என்று எழுதிக்கொடுக்கிறேன் என்றேன். நான் சொன்னது போல, அந்த படத்திற்கு பிறகு, திருமலை, கில்லி என கமர்ஷியல் படத்தில் நடிக்க தொடங்கினார். அப்போதும் அவருக்கு ரசிகர்கள் இருந்தார்கள் ஆனால், கட்சி தொடங்கும் அளவிற்கு அவருக்கு ரசிகர்கள் இல்லை. அந்த நேரத்திலேயே நான் அவரை வைத்து மாஸான கமர்ஷியல் படம் எடுத்தேன்.

ரோல் மாடல்: விஜய்யின் வளர்ச்சி எப்படிப்பட்டது என்பது இந்த உலகத்துக்கே தெரியும். இந்த வளர்ச்சியை யாரும் எதிர்பாக்கவில்லை. ஏன் அவர் கூடஎதிர்பார்த்து இருக்க மாட்டார். மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் அன்பு சாதாரணமானது இல்லை. இன்றைய இளைஞர்களுக்கு விஜய் ஒரு ரோல் மாடலாக இருக்கிறார். அவர் எப்படி கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தார் என்று தெரிந்து, இன்றைய இளைஞர்கள் அவரை பின்பற்றினாலே, எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீந்தி எப்படி வெற்றி பெறலாம் என தெரிந்து கொள்ளலாம்.

அபாரமான வளர்ச்சி: விஜய் சினிமாவில் அறிமுகமான புதிதில் கடுமையான விமர்சனத்தை எதிர் கொண்டார். பத்திரிக்கைகளில் அவர் நடிப்பு குறித்தும் முகம் குறித்தும் விமர்சித்தனர். பின்னாளில் அதே பத்திரிக்கையில் அட்டைப்படத்தில் அவர் படம் வந்தது. அதேபோல் ஆரம்ப காலத்தில் தியேட்டர்களில் அவர் படத்துக்கு ஒரு காட்சி, இரண்டு காட்சி கொடுத்தார்கள். இன்றைக்கு விஜய் படம் தங்கள் தியேட்டரில் ரிலீசாகாதா என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இது அற்புதமான வளர்ச்சி தான்.

GOAT: நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியியை தொடங்கி உள்ளார். சட்டமன்ற தேர்தலில் களம் இறங்க உள்ள விஜய் கமிட்டாகி உள்ள படத்தை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். விஜய்யை வைத்து இயக்குநர் வெங்கட் பிரபு "The Greatest of All Time" என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படதில் அப்பா மகன் என இரண்டு கேரக்டரில் விஜய் நடித்து வருகிறார். இப்படம் செப்டம்பர் 5ந் தேதி வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X