»   »  பாகுபலிக்கு அடுத்து பாக்மதி - பொங்கலுக்கு ரிலீஸ்!

பாகுபலிக்கு அடுத்து பாக்மதி - பொங்கலுக்கு ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'பாகுபலி' படத்தின் மூலம் சினிமாவில் உச்சிக்குச் சென்றார் நடிகை அனுஷ்கா. இன்னும் 'பாகுபலி' படத்தில் தேவசேனாவாக அவரது தோற்றமும், காட்சிகளும் பலராலும் மறக்க முடியாது.

இப்படம் உலக அளவிலும் வரவேற்பை பெற்று இன்னும் வசூலில் பல சாதனைகள் புரிந்து கொண்டிருக்கிறது. அவரின் சினிமா படங்கள் வரிசையில் 'அருந்ததி', 'பாகுபலி' படங்கள் முக்கிய இடங்களைப் பிடித்துவிட்டன.

Bhagmati movie will release on pongal

இதனைத் தொடர்ந்து அவர் காமெடியும் ஹாரரும் கலந்த கதையான 'பாக்மதி' படத்தில் நடித்துள்ளார். அசோக் என்பவர் இயக்கும் இந்தப் படத்தின் அனுஷ்காவுடன் ஆதி, உன்னி முகுந்தன், ஜெயராம், அஷா சரத் ஆகியோர் நடிக்கின்றனர்.

'பாகுபலி' படத்திற்கு முன்பே உடல் எடை பிரச்சனையால் சிரமப்பட்டு வந்த அனுஷ்கா தொடர்ந்து யோகா மூலம் சமீபத்தில் தனது இலக்கை எட்டியிருக்கிறார். தற்போது 'பாக்மதி' படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது.

இந்தப் படத்தின் எடிட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 'பாகுபலி' போலவே இதிலும் சில கிராஃபிக்ஸ் காட்சிகள் இருக்கின்றனவாம். படம் வரும் 2018 ஜனவரியில் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது.

English summary
Actress Anushka went to the top of the cinema with 'Baahubali'. After this she acted in the comedy horror movie 'Bhagmati'. 'Bhagmati' film will release on Pongal in January 2018.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil