twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா... வஞ்சகன் பிறைசூடனடா '... விசுவுக்கு பாக்யராஜ் பதில்!

    பிறைசூடனுக்கு ஆதரவாக இயக்குனர் விசு செயல்படுவதாக இயக்குனர் பாக்யராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

    |

    Recommended Video

    பிறைசூடன் குறித்து விசுவுக்கு பாக்யராஜ் பதில்- வீடியோ

    சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கப் பணக் கையாடல் விவகாரத்தில், பிறைசூடனுக்கு ஆதரவாக இயக்குனர் விசு செயல்படுவதாக இயக்குனர் பாக்யராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

    தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தற்போதைய தலைவர் இயக்குனர் பாக்யராஜுக்கும், முன்னாள் தலைவர் இயக்குனர் விசுவுக்கும் இடையே கடந்த சில தினங்களாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சங்கப் பணம் ரூ.37 லட்சத்தை விசு, பிறைசூடன், மதுமிதா ஆகியோர் கையாடல் செய்துவிட்டதாக, பாக்யராஜ் போலீசில் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து, பாக்ராஜ் மீது பிறைசூடனும் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் இயக்குனர் விசு, வாட்ஸ் ஆப் வாயிலாக பாக்யராஜின் புகாருக்கு பதில் அளித்தார்.

    அதில் சங்கப் பணத்தை கையாடல் செய்யவில்லை எனவும், வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள அந்த பணத்தை வைத்து நலிந்தோருக்கு உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்தார். பாக்யராஜ் உங்கள் மனிதாபிமானம் செத்துவிட்டதா? என்றும் விசு கேள்வி எழுப்பியிருந்தார்.

    அனுபவத்திற்கு அழகல்ல

    அனுபவத்திற்கு அழகல்ல

    இந்நிலையில் இயக்குனர் கே.பாக்யராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதை ஆதாயமாக மாற்ற விசு முயற்சிப்பது, அவரது அறிவிற்கும், அனுபவத்திற்கும் அழகல்ல என தெரிவித்துள்ளார்.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, " செல்போனில் குரல் பதிவு செய்து அமெரிக்காவில் இருந்து விசு வெளியிட்டுள்ள செய்தியில், பாக்யராஜ் உங்கள் மனிதாபிமானம் செத்துவிட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் என் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அவரது உடல் நலன் கருதி தான் நான் மௌனமாக இருந்தேன். ஆனால் என் மௌனம் அவரது குற்றச்சாட்டுகளை உண்மையாக்கிவிடக் கூடாது என சங்க உறுப்பினர்கள் அறிவுறுத்தியதால் தான் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

    அனுதாபங்கள்

    அனுதாபங்கள்

    உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள விசு மீது நான் உள்பட தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கானோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் உள்ளது உண்மை தான். ஆனால் ஆதாயமாக மாற்ற விசு முயற்சிப்பது, அவரது அறிவிற்கும், அனுபவத்திற்கும் அழகல்ல.

     வாட்ஸ்ஆப் பதில்

    வாட்ஸ்ஆப் பதில்

    நீங்கள் அமெரிக்காவுக்கு புறப்பட்டு போன தேதி 22.07.2018. ஆனால் இந்த பிரச்சினை தொடர்பாக நான் உங்களுக்கு 16ம் தேதியே என் கைப்பட எழுதிய கடிதத்தை அனுப்பினேன். மறுநாளே நீங்கள் அதற்கு வாட்ஸ் ஆப்பில் பதில் அனுப்புனீர்கள். அதில் உங்களுக்கு உடல் நலக்குறைவு எனக் கூறினீர்களே தவிர, பிறைசூடன் பின்னால் இருந்து ஏன் இயக்குனீர்கள் என்பதை தெளிவுபடுத்தவில்லை.

    வெளிநாட்டு கலை நிகழ்ச்சி

    வெளிநாட்டு கலை நிகழ்ச்சி

    நாங்கள் நினைத்துக்கூட பார்க்காத ஒரு வெளிநாட்டு கலை நிகழ்ச்சியை நீங்களாக கற்பனையில் அறங்கேற்றி அதில் டிரஸ்ட் பணம் பறிபோய்விடக் கூடாது என்ற பொறுப்புடன் பாதுகாப்பதற்காகவே தர மறுப்பதாக கூறியது எவ்வளவு பெரிய கபட நாடகம்.

    துப்பிவிட்டீர்கள்

    துப்பிவிட்டீர்கள்

    நாம் இருவரும் மல்லாந்து படுத்துள்ள நிலையில் உள்ளோம் என நான் எச்சரித்தும் நீங்கள் 'துப்பி'விட்டீர்கள். கர்ணனை கோடிட்டு காட்டி தாங்கள் கடிதம் எழுதியதால் அதே கர்ணனின் வாழ்க்கை பாடல் வரிகளை நினைவூட்டுகிறேன்.

    வஞ்சகன் பிறைசூடன்

    வஞ்சகன் பிறைசூடன்

    "(செஞ்சோற்று கடன் தீர்க்க)... சேராத இடம் சேர்ந்து... வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா... வஞ்சகன் பிறைசூடனடா". பொதுவாக கவிஞர்கள் ரசனையின் பொருட்டு கவிதையில் பொய்களை புனைவார்கள். ஆனால் பொய்களாலேயே புனையப்பட்ட ஒரு மகாபாக்கியசாலி கவிஞர் பிறைசூடன்.

    காவடி

    காவடி

    இயன்றவரை பிறருக்கு உதவிய விசு, இப்படிப்பட்ட பிறைசூடனுக்காக காவடி எடுப்பது சரியல்ல. விரைவில் அவர் நலமுடன் திரும்பி வந்து நட்பினைத் தொடர பிரார்த்திக்கிறேன்", என பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

    English summary
    The south Indian writers association president has given explanation on the allegations made by director Visu and poet Piraisoodan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X