நல்லதுக்கு வரலனாலும் துக்கத்துல கலந்துக்கனும்.. பாக்யராஜ்க்கும் சுந்தர் ராஜ்க்கும் ஏற்பட்ட விரிசல் தெரியுமா?
சென்னை: இந்தியத் திரையுலகில் 'திரைக்கதை மன்னன்' என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக காலமானது ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் தொடர்ந்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், நடிகர் சுந்தர் ராஜ் நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்திய சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இன்று பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், இருவரும் ஐந்தாவது வரை ஒன்றாக படித்தவர்கள் மேலும் பாக்யராஜ் மற்றும் சுந்தர் ராஜ் இருவரும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள். ஒரே கனவுடன் சென்னை வந்த இருவருக்கும், திரைப்பயணத்தின் தொடக்க காலத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உறவில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கல்லைத் தூக்கி அடிக்கப் பாய்ந்த சுந்தர் ராஜ்: நண்பருடனான மனக்கசப்பை தீர்க்க பாக்யராஜ் பலமுறை முயற்சி செய்ததாகவும், நேரில் சென்று சமாதானம் பேச முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அப்போது சுந்தர் ராஜ் கோபத்தில் தேனாம்பேட்டை அருகே கல்லைத் தூக்கி அடிக்கப் பாய்ந்த சம்பவம் கூட நடந்ததாக திரையுலக வட்டாரங்களில் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. அந்த சம்பவத்திற்குப் பிறகு இருவரும் நீண்ட காலம் பேசிக்கொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

வளர்ச்சியை பார்த்து மகிழ்ந்த நண்பர்: இளம் வயதில் ஏற்பட்ட அந்த கசப்பு இருவரையும் பிரித்தாலும், பாக்யராஜ் இயக்குநராகவும், நடிகராகவும் மிகப்பெரிய உயரத்தை எட்டியதை பார்த்து மனதார மகிழ்ந்தவர்களில் சுந்தர் ராஜும் ஒருவர் என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர். வெளிப்படையாக பழகவில்லை என்றாலும், ஒருவரின் திறமையை மற்றொருவர் மதித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இறுதியில் துக்கத்தில் இணைந்தார்: இந்நிலையில், பாக்யராஜின் மறைவு செய்தியை அறிந்த சுந்தர் ராஜ் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பல ஆண்டுகளாக பேசிக்கொள்ளாமல் இருந்த நண்பருக்கு அவர் செலுத்திய இந்த இறுதி மரியாதை அங்கிருந்த பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதையடுத்து, இந்த பழைய சம்பவத்தை அறிந்த ரசிகர்கள், "நல்லதுக்கு வரலனாலும் துக்கத்துல கலந்துக்கணும்" என்ற பழமொழியை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இறுதியில் நட்புக்காக சுந்தர் ராஜ் வந்து அஞ்சலி செலுத்தியது பலரையும் நெகிழ வைத்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications