கலகத்தை துவங்கிய பாண்டவர் அணி, கேப்டனை சந்தித்த பாக்யராஜ் அணி: களைகட்டும் தேர்தல்
Recommended Video
சென்னை: நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளது.
நடிகர் சங்க தேர்தலில் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் அடங்கிய பாண்டவர் அணியும், பாக்யராஜ், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் பிரசாந்த் உள்ளிட்டோர் அடங்கிய சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகிறது.
பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷும், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் கார்த்தியை எதிர்த்து பிரசாந்தும் களத்தில் உள்ளனர்.

விஜயகாந்த்
நடிகர்கள், நடிகைகள் இடையே மிகுந்த மதிப்பும், மரியாதையும் பெற்றிருப்பவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இந்நிலையில் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இது பாக்யராஜ் அணிக்கு பக்கபலமாகும்.

ராதாரவி
நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. ஆனால் அன்று தேர்தல் நடக்காது என்று தெரிவித்துள்ள நடிகர் ராதாரவி நேற்று அதிமுகவில் சேர்ந்துள்ளார். அவரின் ஆதரவு நிச்சயமாக விஷால் இருக்கும் பாண்டவர் அணிக்கு கிடைக்காது. அப்படி இருக்கும் போது ராதாரவியின் ஆதரவு பாக்யராஜ் அணிக்கு தான் கிடைக்கும். ஆளுங்கட்சியில் சேர்ந்துள்ள ராதாரவியும் பாக்யராஜுக்கு பலம் தான். ராதாரவி பாக்யராஜ் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால்
நாசருக்கு கமல் ஹாஸனின் அமோக ஆதரவு உள்ளது. ஆனால் அவர் அணியில் இருக்கும் விஷால் பலரின் வெறுப்பை சம்பாதித்து வைத்துள்ளர். யாரையும் மதிக்காமல் நடக்கிறார் என்று விஷால் மீது பலர் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் பாண்டவர் அணியினர் பாக்யராஜ் சொன்ன ஒரு வார்த்தையை திரித்து ஏற்கனவே டிராமாவை ஆரம்பித்துவிட்டனர்.

ஓட்டு
பாக்யராஜ் பேட்டி ஒன்றில் நாடக கலைஞர்கள் பற்றி பேசியதை பாண்டவர் அணியினர் திரித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடக கலைஞர்களின் ஓட்டுகளை பெற பாண்டவர் அணி நாடகமாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தலில் இதெல்லாம் சகஜமப்பா. இப்போ தானே தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ?. கடந்த முறை நடந்த நடிகர் சங்க தேர்தலின்போது விஷால் செய்த வேடிக்கைகளை எல்லாம் யாரும் மறக்கவில்லை. இம்முறையும் பெர்ஃபாமன்ஸ் இருக்கும் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











