twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேப்டனை அடுத்து கமலுடன் சந்திப்பு: விஷாலுடன் வேறு மாதிரி கேம் ஆடும் பாக்யராஜ்

    By Siva
    |

    சென்னை: விஜயகாந்தை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸனை சந்தித்து ஆதரவு கோரியுள்ளது பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி.

    வரும் 23ம் தேதி நடக்கும் நடிகர் சங்க தேர்தலில் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் அடங்கிய பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது. அவர்களை எதிர்த்து பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி களத்தில் குதித்துள்ளது.

    Bhagyaraj and team meets Kamal Haasan

    பாண்டவர் அணி சார்பில் பாக்யராஜை தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாடக கலைஞர் ஒருவர் பாக்யராஜை விளாசிய வீடியோவை பாண்டவர் அணி சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளது. மேலும் சரத்குமார், ராதாரவி ஆகியோரை குறை சொல்லியும், தாங்கள் வந்து தான் நடிகர் சங்கத்தை நல்ல நிலைக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்து பாண்டவர் அணி வீடியோ வெளியிட்டுள்ளது.

    பாண்டவர் அணி அடுத்தவர்களை குறை சொல்வதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாக்யராஜோ திரையுலகின் முக்கிய ஆட்களை தனது அணியினருடன் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். பாக்யராஜ் அணியினர் நடிகர் சங்கத்தை நிஜமாகவே மேம்படுத்திய தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தை நேற்று சந்தித்து ஆதரவு கோரியது.

    Bhagyaraj and team meets Kamal Haasan

    இந்நிலையில் உலக நாயகன் கமல் ஹாஸனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இன்று சந்தித்து பேசியுள்ளது சுவாமி சங்கரதாஸ் அணி. எதிரணியினரிடம் குறை கண்டுபிடித்து அவர்களை தூற்றி நேரத்தை வீணாக்காமல் பாக்யராஜ் ஆதரவு கோருவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

    நடிகர் சங்க தேர்தலில் 'சர்கார்' விஜய்யின் ஆதரவு யாருக்கு? நடிகர் சங்க தேர்தலில் 'சர்கார்' விஜய்யின் ஆதரவு யாருக்கு?

    அவரின் இந்த பாசிட்டிவான அப்ரோச் கோடம்பாக்கத்தினருக்கு பிடித்துள்ளது. பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர் கமல் ஹாஸனின் நெருங்கிய நண்பர் என்பது பாக்யராஜுக்கு தெரியாமல் இல்லை. இருப்பினும் கமல் ஹாஸன் மீது வைத்துள்ள மரியாதை காரணமாக அவரை சந்தித்து ஆதரவு கோரியுள்ளார்.

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அதனால் அவர் மும்பையில் உள்ளார். அவரின் ஆதரவு எந்த அணிக்கு இருக்கும் என்ற பேச்சும் கிளம்பியுள்ளது.

    English summary
    Bhagyaraj and his team met Kamal Haasan today seeking his support in the upcoming Nadigar sangam election.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X