18 வருஷமா முகத்தை காட்டாத பாக்யராஜ் மகள்.. கவலைகளில் இருந்து மீண்டு வந்த சரண்யா!

சென்னை: தமிழ் சினிமாவில் தனக்கு என்று தனி அடையாளத்தை வைத்துள்ளார் பாக்யராஜ். இவர் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரின் மகள் சரண்யா, பல ஆண்டுகளாக வெளியில் தலைகாட்டாத நிலையில் தற்போது, இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் சரண்யாவா இது என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர் கே பாக்யராஜ். பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த இவர், சுவர் இல்லாத சித்திரங்கள் என்ற உணர்வுபூர்வமான படத்தை கொடுத்த அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். இதையடுத்து, இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு என பல படங்களை இயக்கியும் நடித்து வெற்றி பெற்றார்.

bhagyaraj poornima saranya
Photo Credit:

பாக்யராஜ்: சினிமாவை தனது திரைக்கதையால் திரும்பி பார்க்க வைத்த பாக்யராஜ், நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் உள்ளனர். சாந்தனுவும் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இதே போன்று மகள் சரண்யா, பாக்யராஜ் இயக்கி தயாரித்த 'பாரிஜாதம்' படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஆனால், இந்தப் படம் பெரியளவில் ரீச்சாகவில்லை. இந்தப் படத்தில் பிருத்விராஜ் ஹீரோவாக நடித்திருந்தார்.

சரண்யா பாக்யராஜ்: அந்த படத்திற்கு பிறகு சரண்யா வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை, வெளியில் தலைகாட்டவும் இல்லை. அவர் காதல் தோல்வியால் மூன்று முறை தற்கொலைக்கு முயன்றதாக அப்போது பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தன. இந்த தகவலை, பாக்யராஜ் தரப்பில் இருந்தோ, சரண்யா தரப்பில் இருந்தோ எந்தவிதமான விளக்கத்தையும் கொடுக்கவில்லை. பல ஆண்டுகளாக வெளியில் தலைகாட்டாமல் இருந்தார் சரண்யா.

bhagyaraj poornima saranya
Photo Credit:

பல ஆண்டுக்கு பிறகு: அண்மையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருந்தார். அதில், தனக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாகவும் அந்த குழந்தை தான் ஒட்டுமொத்த குடும்பத்தையும் மகிழ்ச்சியாக வைத்து இருப்பதாக கூறினார். ஆனால் சரண்யாவுக்கு எப்போது திருமணமானது? அவருடைய கணவர் யார் என்பதை அவர் கூறவில்லை. தற்போது சரண்யா வீட்டில் இருந்த படியே காஸ்ட்யூம் டிசைனர் வேலையை பார்த்து வருகிறார். பல ஆண்டுகளாக வெளிஉலகத்திற்கு தலைகாட்டாமல் இருந்த இவர்,ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தனது அம்மாவுடன் கலந்து கொண்டார். தற்போது சரண்யா தனது இன்ஸ்டாகிராமில், கையில் பூவுடன் இருக்கும் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீயோவை பார்த்த அனைவரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X