காதல் தோல்வி?.. மூன்று முறை தற்கொலை முயற்சி?.. குழந்தை இருப்பதை உறுதி செய்த பாக்யராஜ் மகள்
சென்னை: இந்திய சினிமாவில் திரைக்கதை மன்னன் என்று புகழப்படுபவர் பாக்யராஜ். அவரது ஒவ்வொரு படமும் இப்போது பார்த்தாலும் ரசிகர்களுடன் கனெக்ட் ஆகும் சிறப்புடையவை. காமெடி, எமோஷன் என பக்காவாக அவர் ஒரு படத்தை உருவாக்கியதால்தான் அதிக வெள்ளிவிழா கண்ட இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவருக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் இருக்கிறார்கள். சரண்யா பாரிஜாதம் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய திரையுலகில் திரைக்கதை மன்னன் என்று புகழப்படுபவர் பாக்யராஜ். அவரது திரைப்படங்களை பார்க்கையில் ஒரு காட்சியில்கூட சலிப்பு தட்டாமல் மொத்த ரசிகர்களும் அந்த கதைக்குள் சென்றுவிடும் மாயத்தை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் விடாமல் செய்துகொண்டே வந்தவர் அவர். அதனால் அவருக்கென்று இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர்.

சலிக்கவே சலிக்காது: பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து அவரது பல படங்களுக்கு தூணாக இருந்திருக்கிறார் பாக்யராஜ். பாரதிராஜா இயக்கி சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் உள்ளிட்ட படங்களுக்கு கதையையும் எழுதியிருக்கிறார் அவர். இதனையடுத்து சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே தனது கதையாலும் திரைக்கதையாலும் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார்.
வரிசையாக ஹிட்டுகள்: சுவரில்லாத சித்திரங்கள் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய ஒரு கை ஒரு ஓசை, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும்வரை காத்திரு, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள், சுந்தரகாண்டம், ராசுக்குட்டி என அவர் இயக்கிய அத்தனை படங்களுமே ஹிட்டடித்தன. அவரது ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் ஏ செண்டர், பி செண்டர், சி செண்டர் என அத்தனை செண்டர்களிலும் பாக்யராஜுக்கென்று ரசிகர்கள் இருந்தனர்.
பாக்யராஜ் குடும்பம்: இதற்கிடையே பாக்யராஜின் முதல் மனைவி உடல்நல குறைவால் உயிரிழந்துவிட்டார். அதனையடுத்து நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பாக்யராஜ். அவர்களுக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் இருக்கிறார்கள். சாந்தனு தமிழ் சினிமாவில் அடையாளப்பட்ட நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். சரண்யாவோ பாரிஜாதம் என்ற படத்தில் மட்டும் நடித்திருந்தார்.
ட்ரெண்டாகும் புகைப்படம்: சரண்யாவுக்கு 38 வயதாகியும் இன்னும் திருமணம் நடக்கவில்லை. அதற்கு காரணம் அவருக்கு ஏற்பட்ட காதல் தோல்விதான் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்தக் காதல் தோல்வியால் மூன்று முறை தற்கொலை முயற்சியையும் அவர் மேற்கொண்டதாகவும் ஒரு பேச்சு உண்டு. இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், "நானும் சாந்தனுவும் ஒருவருக்கொருவர் அன்பையும் பாசத்தையும் வைத்திருக்கிறோம். ஆனால் அதனை நாங்கள் எப்போதும் வெளியில் காட்டிக்கொண்டது இல்லை.
குழந்தை இருக்கிறது: சாந்தனு நடித்திருந்த ப்ளூ ஸ்டார் படம் எனக்கு பிடித்திருந்தது. நான் குழந்தையையும் பார்த்துக்கொண்டு நான் செய்யும் காஸ்ட்யூம் டிசைனர் வேலையையும் பார்ப்பது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. என்னுடைய அம்மா எப்படி சிரமப்பட்டிருப்பார் என்பது இப்போதுதான் புரிகிறது. எனக்கு என்னுடைய குடும்பத்தினர்தான் எல்லா விஷயங்களிலுமே சப்போர்ட்டாக இருக்கிறார்கள். இதனால் புதிய தாயாக நான் இருந்தாலும் தூங்கும் நேரம் எனக்கான ஸ்பேஸ் ஆகியவை கிடைக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











