73 வயசு சாகும் வயசா?.. என்னை விட 12 வயசு சிறியவர்.. பாக்யராஜுக்கு அஞ்சலி செலுத்திய சிவகுமார் உருக்கம்

சென்னை: சின்னக் கலைவாணர் விவேக், எஸ்.பி. பாலசுப்ரமணியம், பாரதிராஜா, பாக்யராஜ் என தொடர்ந்து பல ஜாம்பவான்களை தமிழ் சினிமா இழந்து வருகிறது. அந்த வரிசையில் இன்று காலை மாரடைப்பு காரணமாக பாக்யராஜ் உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் சோகத்தில் ஆழ்த்தியது.

கோவாவில் குஷ்பு மகள் அவந்திகாவின் திருமணத்தில் பங்கேற்று அனைவரிடமும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த மனிதர், இன்று காலை சீக்கிரமே எழுந்து வாக்கிங் சென்று திரும்பி வந்ததும் நெஞ்சு வலிக்குது என மருத்துவமனைக்குச் சென்ற நிலையில் அவருடைய உயிர் பிரிந்தது பலரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தியது.

Bhagyaraj Death Sivakumar attends Funeral and gets emotional

பாரதிராஜா மறைவுக்கு சிவகுமார், சூர்யா உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், பாக்யராஜ் மறைவுக்கு இன்று நேரில் வந்து அஞ்சலி செலுத்திய சிவகுமார் 73 வயசுலாம் சாகுற வயசாய்யா என்னய்யா சொல்றது என பேசியது பலரையும் உலுக்கி எடுத்துள்ளது.

பாரதிராஜா உயிரிழந்து 17 நாளில்: கடந்த ஜூன் 10ம் தேதி தான் பாரதிராஜா உயிரிழந்தார். அவருடைய சிஷ்யனான பாக்யராஜ் பாரதிராஜாவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தார். இன்று பாக்யராஜ் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய சிவகுமார் என்னய்யா சொல்றது, பாரதிராஜா போல ஒரு இயக்குநர் இனிமேல் பிறக்க முடியாது. அவர் கிராமத்து கதைகளை கவித்துவமாக சொன்ன மகான் பாரதிராஜா போயிட்டாரு. அதே கிராமத்துக் கதைகளை அகாடமிக்கா சொன்ன மனுஷன் பாக்யராஜும் இன்று நம்முடன் இல்லை. பாக்யராஜ் போன்ற ஒரு திரைக்கதை மேதையும் இனிமேல் பிறப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றார்.

என்னை விட 12 வயசு சிறியவர்: 73 வயசுலாம் சாகுற வயசாய்யா, என்னை விட 12 வயசு சின்னப் பையன், என்னத்த சொல்றதுன்னே தெரியல.. பாக்யராஜ் போல ஒரு மாமேதை இனிமேல் பிறப்பது கஷ்டம். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வணங்குகிறேன் என நடிகர் சிவகுமார் ரொம்பவே மனக்குமுறலுடன் பேசிய காட்சிகள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தமிழ் சினிமாவின் சாதனை நாயகர்கள் எல்லாம் வரிசையாக உயிரிழப்பது தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X