நலிந்த கலைஞர்கள் விஷம் கொடுக்க சொல்கிறார்கள்... பாக்யராஜ் வேதனை
சென்னை : நலிந்த கலைஞர்கள் ஓய்வூதியம் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள், எங்களை விஷம் கொடுத்து கொன்று விடுங்கள் என்று கடிதம் எழுதுகிறார்கள் என்று பாக்யராஜ் உருக்கமாக பேசினார்.
Recommended Video
நடிகர் சங்க தேர்தல் தொடர்பான தீர்ப்பு அறிவித்த தேதியை விட ஒரு நாள் முன்னதாக வந்து விட்டது. இதில் நடிகர் சங்க தேர்தல் செல்லாது என்று தீர்ப்பு வந்திருக்கிறது. இதற்கு விஷால் மற்றும் கார்த்தி அணியினர் மேல்முறையீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். இதனை அடுத்து ஐசரிகணேஷ் மற்றும் பாக்யராஜ் அணியினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்கள்.

விஷால் அணியினர் அவரின் எதிர் தரப்பிற்கும் நடிகர் சங்க தேர்தல் குறித்த பிரச்சனைகள் கடந்த 6 மாத காலமாக சென்று கொண்டிருக்கிறது. இதனிடையில் நடிகர் சங்கம் சார்பில் நளிந்த பழைய நடிகர்களுக்கு சென்று சேர வேண்டிய ஓய்வூதிய தொகை கடந்த 6 மாத காலமாக சென்றடையவில்லை.
தற்போது 6 மாத காலம் ஓய்வூதியம் பெற முடியாத நடிகர்கள், நடிகர் சங்கத்திற்கு பல்வேறு உருக்கமான கடிதங்களை தொடர்ந்து எழுதி வருவதாக இயக்குனர் பாக்யராஜ் கூறியிருக்கிறார். இது குறித்து பாக்யராஜ் கூறுகையில், ஒரு நடிகர் ஓய்வூதியத்தை தொடர்ந்து தள்ளி போடுவதை தவிர்த்து விட்டு எங்களுக்கு விஷம் கொடுங்கள் என்று எழுதி இருக்கிறார் இதை படிக்கும் போது மனம் மிகவும் வேதனை அடைந்தது என்று கூறினார் பாக்யராஜ்.

வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரிகணேஷ் தற்போது 450 பெயருக்கு ஓய்வூதியம் கொடுத்து வருகிறார்கள் இவர்களின் வங்கி கணக்குகள் பற்றிய தகவல்கள் விஷால் அணியிடம் தான் இருக்கிறது. அவர்கள் அதனை தந்தால் மட்டும் போதும் நாங்கள் கூட எங்களின் சொந்த செலவிலோ அல்லது பெரிய நடிகர்களின் உதவியிலோ பணத்தை கொண்டு சேர்த்து விடுவோம் ஆனால் விஷால் அணியினர் தற்போது மேல்முறையீடு செல்வது மிகவும் தவறான செயல் என்று கூறியுள்ளார்.

இறுதியாக ஐசரிகணேஷ் ஓய்வூதியம் கொடுக்க நாங்களே முடிவு செய்து விட்டோம் அதனால் ஓய்வூதியம் பெற விரும்பும் நடிகர்கள் தயவு செய்து கடிதம் வாயிலாகவோ அல்லது சென்னையில் உள்ள வேல்ஸ் நிறுவனத்தில் வந்தோ தங்களின் அடையாளங்களையும் வங்கி விவரங்களையும் கொடுத்து சென்றால் இந்த மாதத்தில் இருந்தே நாங்கள் ஓய்வூதியம் தர துவங்கி விடுவோம் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











