பாக்கியராஜ் கடைசியாக குஷ்பு மகள் திருமணத்தில் கூட பட்டு வேட்டியில் கலக்கினாரே.. சோகத்தில் திரையுலகம்

சென்னை: வேட்டியை மடிச்சிக்கட்டு படத்தில் நடித்த பாக்கியராஜ் கடைசியாக குஷ்பு மகள் திருமண வரவேற்பு நிகழ்வில் கூட பட்டுச் சட்டை, பட்டு வேட்டியில் கலந்துக் கொண்டு சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்களுடன் பேசி சிரித்ததை பார்த்து ரசித்த ரசிகர்கள், இன்று காலை இப்படியொரு அதிர்ச்சியான செய்தியை கேட்டு சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

வெறும் 73 வயதே ஆகும் நிலையில், பாக்கியராஜ் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.

Bhagyaraj last big function is a Khushbu Daughter Wedding

எப்போதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் பாக்கியராஜ் பல சிறு பட்ஜெட் படங்களின் விழாவுக்கெல்லாம் முதல் ஆளாக சென்று அந்த படங்களை வாழ்த்தியும் வாழவைத்தும் வந்த திரைக்கதை மேதையை இனிமேல் அந்த மேடைகளில் பார்க்க முடியாதே என திரை பிரபலங்கள் கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளனர்.

பாரதிராஜாவை தொடர்ந்து பாக்யராஜ்: 85 வயதை கடந்த நிலையில், இயக்குநர் இமயம் பாரதிராஜா இந்த மாத தொடக்கத்தில் உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழ் சினிமா துறையையும் சோகத்தில் ஆழ்த்தியது. பாரதிராஜா மறைந்து 17 நாட்களில் அந்த 7 நாட்களின் ஆன்மாவும் தனது கூட்டை விட்டுச் சென்று விட்டதே என ரசிகர்களும் திரை பிரபலங்களும் கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளனர்.

குஷ்பு மகள் திருமணத்தில்: கோவாவில் நடைபெற்ற குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமணத்தில் கடைசியாக பாக்யராஜ் பங்கேற்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது தீயாக பரவி வருகின்றன. சிரஞ்சீவி, வெங்கடேஷ், குஷ்பு உள்ளிட்ட நடிகர்களுடன் ரொம்பவே சந்தோஷமாக சிரித்துப் பேசி மணமக்களை வாழ்த்திவிட்டு சென்னை திரும்பிய நிலையில், மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்: சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்கு அழைத்துச் சென்றும் பாக்யராஜ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைக்கதை வித்துவான் என்று எம்ஜிஆரால் புகழப்பட்ட பாக்யராஜை திரையுலகம் என்றுமே மறவாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X