முந்தானை முடிச்சில் எனக்கு சம்பளம் கம்மிதான்.. பாக்யராஜ் பேச்சு

சென்னை: நான் நடித்து வெற்றி பெற்ற முந்தானை முடிச்சு படத்திற்கே எனக்கு கம்மி சம்பளம் தான் என்று இயக்குனர் கே. பாக்யராஜ் கூறியுள்ளார்.

அப்போது எனக்கு வியாபார யுத்திகளைப்பற்றி தெரியவில்லை, சம்பளம் அதிகமா கேட்டா, கோபித்துக்கொள்வார்கள் என்று நினைத்து பயந்தேன் என்று கூறினார்.

Bhagyaraj music release function

"நான் அவளை சந்தித்த போது" படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இப்படத்தின் சிறப்பு விருந்தினராக இயக்கும் கே.பாக்யராஜ் மற்றும் இயக்கும் பேரரசு ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

விழாவில் பேசிய பாக்கியராஜ், நான் முந்தானை முடிச்சு படத்திற்கு முன்பே பல வெற்றிப்படங்களை தந்தவன், எனக்கே அப்போ ஒன்றரை லட்சம் ரூபாய் தான் சம்பளமா கொடுத்தாங்க. ஆனால், அந்த சமயத்தில் எனக்கு வியாபார யுக்தி தெரியல, சம்பளத்தை அதிகமா கேட்டால் தயாரிப்பாளர் கோபித்துக் கொள்வாரோனு நான் பயந்து கொடுத்ததை வாங்கிக்கிட்டேன்.

ஆனால், இப்போ நிலைமை வேறு, ஒரு படத்தில் வெற்றி பெற்றுவிட்டாலே சம்பளத்தை அவங்களே முடிவு செய்து விடுகிறார்கள் என்றார்.மேலும் பேசிய அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படம் வெளியாகியுள்ளது இப்படத்தை தயாரிப்பாளர் மிகவும் சரியான முறையில் தயாரித்துள்ளார். இந்த படம் 50நாட்கள் 100நாட்கள் என சபை நிறைந்து ஓட வேண்டும் என மனமாற வாழ்த்துவதாக கூறினார்

படத்தை எல்.ஜீ.ரவிசந்தர் இயக்கியுள்ளார். சந்தோஷ் பிரதாப் ,சாந்தினி, சிங்கமுத்து ,ராதா ,சாந்தி வில்லியம்ஸ்,சாம்ஸ்,அல்வா வாசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர் படத்தை வீ.டி.ரதிஸ்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜித்தேஷ் முருகவேல் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X