எழுத்தாளர் சங்கத் தலைவராக விஜய்யிடம் பகையை வளர்த்துக் கொண்ட பாக்யராஜ்.. அரசு மரியாதை கொடுத்து அனுப்பிய CM
சென்னை: சென்னை: இந்தியத் திரையுலகில் 'திரைக்கதை மன்னன்' என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் மறைவையடுத்து தமிழக அரசு சார்பில் அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் அரசு மரியாதை வழங்கப்பட்ட நிலையில், கடந்த காலத்தில் பாக்யராஜுக்கும் விஜய்யின் திரையுலக வட்டாரத்துக்கும் இடையே நடந்த சம்பவங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் பேசுபொருளாகி வருகின்றன.
பாக்யராஜ் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்த காலகட்டத்தில், கதைத்திருட்டு புகார்கள் தொடர்பாக மிகவும் கண்டிப்பாக செயல்பட்டவர் என்ற பெயரை பெற்றிருந்தார். எந்த இயக்குநராக இருந்தாலும், எந்த தயாரிப்பு நிறுவனமாக இருந்தாலும், எழுத்தாளர்கள் தரப்பில் புகார் வந்தால் அதனை அலட்சியப்படுத்தாமல் விசாரித்து நடவடிக்கை எடுப்பார் என்று திரையுலகினர் கூறி வருகின்றனர்.

அட்லிக்கு அதிக நெருக்கடி: குறிப்பாக இயக்குநர் அட்லி இயக்கிய சில திரைப்படங்கள் மீது கதை ஒற்றுமை தொடர்பாக எழுந்த புகார்களில், படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்த நிலையிலேயே எழுத்தாளர் சங்கம் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டதாகவும், புகார்தாரர்களின் கருத்துகளை கேட்டு பஞ்சாயத்து நடத்தப்பட்டதாகவும் அப்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் தயாரிப்புத் தரப்புக்கும், இயக்குநருக்கும் பல்வேறு சட்டரீதியான ஆலோசனைகள் தேவைப்பட்ட சூழலும் உருவானதாக கூறப்படுகிறது.
அந்த காலகட்டத்தில் பாடலாசிரியர் விவேக்கின் மனைவியும் வழக்கறிஞருமான அருள் மொழி (Lawyer) உள்ளிட்ட சட்ட நிபுணர்கள் மூலமாக பல்வேறு காப்புரிமை தொடர்பான விவகாரங்கள் கையாளப்பட்டதாகவும், எழுத்தாளர்களின் உரிமையை பாதுகாப்பதில் பாக்யராஜ் மிகவும் உறுதியுடன் இருந்ததாகவும் திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டது.

பெரிய படங்களுக்கும் பஞ்சாயத்து: அட்லி படங்கள் மட்டுமல்லாமல், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய 'சர்கார்', சந்தானம் நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' உள்ளிட்ட பல படங்களுக்கும் கதை ஒற்றுமை குறித்த புகார்கள் எழுந்தபோது, எழுத்தாளர் சங்கம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயன்றவர்களில் முக்கியமானவர் பாக்யராஜ்தான். எந்தப் பெரிய நட்சத்திரத்தின் படமாக இருந்தாலும், எழுத்தாளர்களின் உரிமையில் சமரசம் செய்யக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
எல்லாத்தையும் மறந்து அரசு மரியாதை: இந்நிலையில், அந்த காலத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் திரையுலக மோதல்கள் அனைத்தையும் கடந்துவிட்டு, இன்று தமிழக முதலமைச்சராக உள்ள விஜய், பாக்யராஜின் மறைவுக்கு அரசு மரியாதை அளிக்க உத்தரவிட்டது பலரது கவனத்தை ஈர்த்தது. அவர் உத்தரவிட்டது போல, அரசு மரியாதையுடன் பாக்யராஜின் இறுதி ஊர்வலம் அமைந்தது. அரசியல், சினிமா, சங்கத் தேர்தல், தொழில்முறை கருத்து வேறுபாடுகள் என எத்தனை சம்பவங்கள் நடந்திருந்தாலும், தமிழ் சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை மதித்து இறுதி மரியாதை செலுத்தியதாக திரையுலகினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாக்யராஜ் வாழ்ந்த காலத்தில் பலருடன் தொழில்முறை ரீதியாக மோதியிருந்தாலும், அது தனிப்பட்ட பகையாக மாறாமல், இறுதியில் அவரது கலைப்பணிக்கு கிடைத்த மரியாதையே இந்த அரசு மரியாதை என சமூக வலைதளங்களிலும் பலரும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications