மகள் திருமணம் முடிந்த கையோடு ஓடோடி வந்த குஷ்பு.. துக்கம் தாங்காமல் கதறி அழுத சாந்தனு!

சென்னை: இயக்குனர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா என பன்முகத் திறமைகளைக் கொண்டு, ரசிகர்களால் 'திரைக்கதை மன்னன்' என்று அன்போடு அழைக்கப்படும் கே.பாக்யராஜ் காலமானார். அவருக்கு வயது 73. இந்த திடீர் மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகையும், ரசிகர்களையும் ஆழமான சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கே பாக்யராஜ்: நடிகை குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமணம் கோவாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கலந்து கொண்டுவிட்டு பாக்யராஜ் சென்னை திரும்பியிருந்தார். சனிக்கிழமை காலை வழக்கம்போல் தனது நடைபயிற்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு லேசாக நெஞ்சு வலிப்பதாக குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனால் பதறிய குடும்பத்தினர், அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பாக்யராஜ் மாரடைப்பால் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.

Bhagyaraj Kushboo Sundar

இறுதி அஞ்சலி: மறைந்த பாக்யராஜின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. அங்கு திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள், இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, நேற்று அவரது உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

ஓடோடி வந்த குஷ்பூ: தனது மகள் அவந்திகாவின் திருமண வேலைகளில் இருந்ததால், நடிகை குஷ்புவால் பாக்யராஜின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் மிகுந்த மனவருத்தத்தில் இருந்த குஷ்பூ, இன்று காலை சென்னை வந்தடைந்ததும் முதல் வேலையாக தனது கணவர் சுந்தர் சி-யுடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள பாக்யராஜின் இல்லத்திற்கு வந்து, பாக்யராஜின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். குஷ்புவைக் கண்டதும் பாக்யராஜின் மகன் சாந்தனு, துக்கம் தாங்காமல் கட்டிப்பிடித்துக் கதறி அழுதார். இந்த நெஞ்சை உருக்கும் காட்சியைக் கண்டு அங்கிருந்தவர்களும் கண் கலங்கினர். சாந்தனுவின் கைகளைப் பிடித்துக்கொண்டு, குஷ்பூ அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X