பாக்யராஜ் வீட்டில் விசேஷம்.. அவர் மகள் எவ்வளவு மகிழ்ச்சி பாருங்க.. குடும்பமே கொண்டாட்டம்தான்
சென்னை: இந்திய திரைத்துறையில் திரைக்கதை மன்னர் என்று புகழப்படுபவர் பாக்யராஜ். முதலில் ஒரு திருமணம் செய்த அவர்; முதல் மனைவி இறந்ததால் அடுத்ததாக நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவரது வாரிசுகளில் சாந்தனு ஓரளவு பிரபலமான நடிகராக இருக்கிறார். மகள் சரண்யாவோ பாரிஜாதம் என்ற படத்தில் மட்டும்தான் நடித்தார். இந்நிலையில் அவர்களது குடும்ப புகைப்படம் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
பாரதிராஜவின் உதவி இயக்குநர், கதாசிரியராக இருந்த பாக்யராஜ் இந்திய திரைத்துறையில் பெரும் ஆளுமையாக விளங்கக்கூடியவர். ஏகப்பட்ட ஹிட் படங்களை எடுத்திருக்கிறார். 80களில் பீக்கில் இருந்த இயக்குநர்களில் இவரும் ஒருவர். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இயக்குநராக ஜொலித்த அவர்; யாருக்கும் எதற்கும் காம்ப்ரமைஸ் ஆகாமல் தனது பாணியில் எடுத்து ஒரு படத்தை ஹிட் கொடுக்கக்கூடிய இயக்குநர் ஆவார்.
திரைக்கதை மன்னன்: பாக்யராஜின் படங்களில் ஸ்பெஷல் என்றாலே அது திரைக்கதைதான். படத்தை பாதியிலிருந்து பார்த்தாலும் அதை ரசிகன் புரிந்துகொள்ளும்படி எடுப்பார். அதுமட்டுமின்றி திரைக்கதையை வெறும் காட்சிகளின் தொகுப்பாக மட்டும் உருவாக்காமல் வாழ்வில் நடக்கும் எதார்த்த சம்பவங்கள், வசனங்களை வைத்து உருவாக்கியதால் எல்லோரையும் அந்தத் திரைக்கதை கவர்ந்தது. இதன் காரணமாகத்தான் திரைத்துறையில் அவர் திரைக்கதை மன்னன் என்று கொண்டாடப்படுகிறது.

பாக்யராஜின் வாரிசுகள்: பாக்யராஜுக்கு முதலில் ஒரு திருமணம் நடந்தது. ஆனால் முதல் மனைவி உடல்நல குறைவால் உயிரிழந்துவிட்டார். அதனையடுத்து சில காலம் சிங்கிளாக இருந்த அவர்; பிறகு நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்கள்தான் சாந்தனுவும், சரண்யாவும். தன்னை போன்றே தனது வாரிசுகளையும் சினிமாவில் களமிறக்கினார் இயக்குநர். ஆனால் பெரிய வெற்றி எதுவும் பெறவில்லை.
சரண்யா நிலைமை பாவம்: சாந்தனு தொடர்ந்து நடித்துவந்தாலும் ஒரு பெரிய திருப்புமுனை கிடைக்கவில்லை. சுப்ரமணியபுரம் திரைப்படத்தில்கூட அவர்தான் நடித்திருக்க வேண்டியது. ஆனால் சில காரணங்களால் நடிக்கவில்லை. மகள் சரண்யாவை பொறுத்தவரை பாரிஜாதம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதனை பாக்யராஜ்தான் இயக்கியிருந்தார். ஆனால் படம் வெற்றியடையவில்லை. அதனையடுத்து ஒட்டுமொத்தமாக சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டார்.
ட்ரெண்டாகும் புகைப்படம்: அதுமட்டுமின்றி அவர் ஒருவரை காதலித்ததாகவும், அந்த நபர் சரண்யாவை ஏமாற்றிவிட்டதாகவும் கூறப்படுவதுண்டு. பாக்யராஜும் சில பேட்டிகளில் அதை மேம்போக்காக பேசியிருக்கிறார். இடையில் சரண்யா எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. சில முறை தற்கொலை முயற்சி செய்தார் என்றும் பரபரப்பாக பேசப்பட்டன. இந்நிலையில் பாக்யராஜ் - பூர்ணிமா இன்று தங்களது 42ஆவது திருமண நாளை கொண்டாடுகிறார்கள். அதனையொட்டி பாக்யராஜ், பூர்ணிமா, சாந்தனு, சரண்யா, சாந்தனுவின் மனைவி கீர்த்தி உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படத்தை சாந்தனு வெளியிட்டிருக்கிறார். அதில் சரண்யாவைத்தான் எல்லோரும் நோட் செய்துவருகிறார்கள். அவர் நிறைவான மகிழ்ச்சியோடு இருப்பது புகைப்படத்தை பார்க்கும்போது தெரிகிறது. இப்படியே அவர் இருக்க வேண்டும் எனவும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











