திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிய பாக்யராஜ்: காரணம் சர்கார்?
Recommended Video

சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார்.
உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரனின் செங்கோல் கதையும், ஏ.ஆர். முருகதாஸின் சர்கார் படக் கதையும் ஒன்று என்று விசாரணை நடத்தி தெரிவித்தவர் இயக்குனர் கே. பாக்யராஜ்.

பெரிய நடிகர் படம், பெரிய தயாரிப்பு நிறுவனம் என்று பார்த்து தனது நிலையை அவர் மாற்றிக்கொள்ளவில்லை. எழுத்தாளர் சங்க விசாரணையில் கதை திருடப்பட்டது உறுதியானது தான் வருண் ராஜேந்திரனுக்கு பெரிய பிளஸ் பாயிண்டாக இருந்தது.
இந்த பிரச்சனையை சுமூகமாக பேசித் தீர்க்க முயன்றார் பாக்யராஜ். ஆனால் முருகதாஸ் ஒத்துழைக்காததால் நீதிமன்றம் சென்று வென்றார் வருண். இந்நிலையில் பாக்யராஜ் எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தான் அவர் எழுத்தாளர் சங்க தலைவராக பொறுப்பேற்றார். சர்கார் கதை திருட்டு விவகாரம் தொடர்பாக தனது நிலையை விளக்கிக் கூறியும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டதால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
சர்கார் பட விவகாரத்தில் தனது தந்தை மீது எந்த தவறும் இல்லை. அதனால் அவரை விமர்சிப்பது சரி அல்ல என்று பாக்யராஜின் மகன் சாந்தனு தொடர்ந்து தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











