Saranya: 38 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாத வாரிசு நடிகை... இவங்க லைஃப்ல இப்படியொரு சோகமா?
சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் கே பாக்யராஜ்.
திரைக்கதை மன்னன் என்ற பெயர் பெற்ற கே பாஜ்யராஜ் தற்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
அவர் இயக்கிய பாரிஜாதம் திரைப்படத்தில் மகள் சரண்யாவை நாயகியாக நடிக்க வைத்து சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
அதன்பின்னர் சரியான பட வாய்ப்புகள் அமையாத சரண்யா, 38 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லையாம்.

திருமணம் செய்துகொள்ளாத சரண்யா பாக்யராஜ்:தமிழ் மட்டுமின்றி இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்ற புகழுடன் வலம் வந்தவர் கே பாக்யராஜ். இயக்குநர், நடிகர் என பன்முகக் கலைஞனாக வெற்றிக்கொடி நாட்டிய பாக்யராஜ், நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சரண்யா என்ற மகளும், சாந்தனு என்ற மகனும் உள்ளனர்.
இவர்களில் சரண்யாவை 2006ம் ஆண்டு தான் இயக்கிய பாரிஜாதம் படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தினார் பாக்யராஜ். மலையாள நடிகர் ப்ரித்விராஜ் ஹீரோவாக நடித்த இந்தப் படம் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. அதேநேரம் நடிகையாக சரண்யா ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன்பின்னர் சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் அப்படியே முடங்கிவிட்டார் சரண்யா.
இந்நிலையில், சரண்யாவின் தம்பி சாந்தனு பாக்யராஜ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அவர் பிரபல தொகுப்பாளினி கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பி சாந்தனு திருமணம் செய்துகொண்ட நிலையிலும் சரண்யா இப்போது வரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. 38 வயதாகியும் சரண்யா இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிட்டது.

இந்நிலையில் இத்தனை வயதாகியும் சரண்யா திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் காரணம் குறித்து தற்போது தகவல் வெளிவந்துள்ளது. சரண்யாவும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்தியர் ஒருவரும் சில வருடங்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் சரண்யாவின் காதல் தோல்வியில் முடிந்ததால் 3 முறை தற்கொலை செய்ய முயற்சி செய்தாராம். தற்கொலைக்கு முயன்ற அவரை பாக்யராஜும் அவரது குடும்பத்தினரும் காப்பாற்றியுள்ளனர்.
இதனால் தான் 38 வயதாகியும் சரண்யா இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறாராம். மேலும் சரண்யா தற்போது தனியாக ரீடைல்ஸ் ஷாப்பிங் தொழிலை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஹன்சிகாவின் 51வது படத்தில் திரைக்கதை எழுதவும் கமிட் ஆகியுள்ளாராம். காதல் தோல்வியால் இத்தனை வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார் சரண்யா. இந்தச் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











