இயக்குநர்கள் சுயமாக சிந்திக்க வேண்டும்.. அடுத்தவன் சட்டையை ஆல்ட்ரேஷன் பண்ணக் கூடாது - பாக்கியராஜ்!
சென்னை: ஜன நாயகன் திரைப்படம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், "அடுத்தவன் சட்டையை ஆல்ட்ரேஷன் பண்ணி போட்டால் அது புதுசா தெரியாது" என பாக்கியராஜ் பேசிய வீடியோவை ஷேர் செய்து ஜன நாயகன் படத்தை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
வீதி தரும் வெண் திரை விருது விழா நிகழ்ச்சியில் சமீபத்தில் இயக்குநர் பாக்கியராஜ் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசும்போது தமிழ் சினிமாவில் புதுமையான படைப்புகள் வந்துக் கொண்டிருக்கின்றன.

புதிய கருத்துக்களையும் கதைகளையும் படமாக எடுக்கும் போது பல பிரச்சனைகள் வரும். ஆனால், அதற்கு எல்லாம் பயந்து அதை நிறுத்திவிடக் கூடாது என ஊக்கம் தரும் வகையில் பேசினார்.
டியூட் படத்திற்கு எதிரான கருத்து: கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம் தாலி சென்டிமென்ட்டுக்கு எதிரான படமாக வந்த போது, அதை எதிர்த்து பாக்கியராஜ் பேசியது பெரும் விவாதத்தை கிளப்பியது. இது நம்ம ஆளு, சின்ன வீடு படங்களை எல்லாம் பண்ண பாக்கியராஜா இப்படி பேசுகிறார் என பிரதீப் ரங்கநாதன் ஃபேன்ஸ் அட்டாக் செய்தனர்.
அடுத்தவன் சட்டை: இந்நிலையில், வீதி தரும் வெண் திரை விருது அமர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பாக்கியராஜ், புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தான் பார்த்திபன், பாண்டிராஜன் போன்றவர்கள் வரமுடியும் என பேசிய அவர், இயக்குநர்கள் புதிதாக சிந்திக்க வேண்டும், அடுத்தவன் சட்டையை ஆல்ட்ரேஷன் பண்ணி போட்டால் அது நல்லாத்தான் இருக்கும். ஆனால், புதுசா இருக்காது என்றார். காதல் என்பது பொதுவுடமை போன்ற படங்களுக்கு அதிக சிக்கல் கிளம்பியது. ஆனால், அதற்கெல்லாம் பிரேக் எடுத்து விடாதீங்க, தொடர்ந்து முயற்சி பண்ணால் நல்ல வெற்றி கிடைக்கும் என்றார்.
ஜன நாயகனுக்கு அடி: பாக்கியராஜ் மறைமுகமாக ஜன நாயகன் படத்தை தான் அட்டாக் செய்து பேசியுள்ளார் என்றும் பகவந்த் கேசரி ரீமேக்காக ஜன நாயகன் வெளியாகவுள்ள நிலையில், பாக்கியராஜின் இந்த பேச்சை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். இயக்குநர் வினோத் ஆரம்பத்தில் ஒரிஜினலாக சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை எடுத்தார். அவர் கவனிக்கப்பட்டார். ஆனால், அதன் பின்னர், அஜித், விஜய் பக்கம் சென்ற அவர் தொடர்ந்து மற்றவர்களின் கதைகளையே படமாக்கி வருகிறார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











