திடீர் விபத்து.. பிரபல முன்னாள் ஹீரோயின் கணவருக்கு அறுவை சிகிச்சை.. ரசிகர்களுக்கு நன்றி!
மும்பை: பிரபல முன்னாள் ஹீரோயின் கணவருக்குத் தோளில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை பாக்யஶ்ரீ. இவர் சல்மான் கானுடன், மைனே பியார் கியா படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர்.
இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனதையடுத்து இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்தன.

திருப்பம் ஏற்படுவது
முதல் படத்திலேயே கவனிக்கப்பட்ட இவர், திருமணத்துக்குப் பிறகு அதிகப் படங்களில் நடிக்கவில்லை. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ள பாக்யஶ்ரீ, இப்போது பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிக்கும் ராதே ஷ்யாம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். தமிழில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான 'தலைவி' படத்தில் நடித்து வருகிறார். இதை விஜய் இயக்குகிறார்.

லாக்டவுன்
இதில் நடிப்பது பற்றி பாக்யஶ்ரீ கூறும்போது, 'இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். 'தலைவி'யின் வாழ்க்கையில் என்னால்தான் திருப்பம் ஏற்படுவது போன்ற கேரக்டர். மைசூர், சென்னை, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் ஷூட்டிங் நடந்தது. ஏப்ரல் மாதம் நான் இந்த படத்தில் நடிப்பது பற்றி அறிவிக்க இருந்தார்கள். அதற்குள் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டு விட்டது என்று கூறியிருந்தார்.

அறுவை சிகிச்சை
இந்நிலையில் பாக்யஶ்ரீயின் கணவர் ஹிமாலயா தசானி (Himalaya Dasani)க்கு அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது பற்றி அவர் தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள கோகிலாப்பென் மருத்துவமனையில் அவருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதுபற்றி நடிகை பாக்யஶ்ரீ, கூறியிருப்பதாவது, அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது. துரதிர்ஷ்டவசமாக ஒரு விபரீத விபத்து. எங்களுக்கு வேறு வழியில்லை. டாக்டர் தின்ஷா பரிவாலா சிறப்பான சிகிச்சை அளித்தார்.
Recommended Video

கொரோனா நோயாளிகள்
மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள், டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு நன்றி கூறுகிறேன். கோவிட்-19-க்கான வழிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறது. கொரோனா பாதித்த நோயாளிகள் மற்றும் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தனி மாடியில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தொடர்பு இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள். எனது நலம் விரும்பிகளுக்கும் அவர்களின் பிரார்த்தனைக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. விரைவில் வீடு திரும்புவோம். இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











