கங்கனா ரனவத்தின் 'தலைவி'யில் அந்த முன்னாள் ஹீரோயின் இந்த கேரக்டரில்தான் நடிக்கிறாராமே..!

By

சென்னை: தலைவி படத்தில் பிரபல பாலிவுட் நடிகை என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பது இப்போது தெரியவந்திருக்கிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை, தலைவி என்ற பெயரில் சினிமாவாக்கப்பட்டு வருகிறது.

விஜய் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக, இந்தி நடிகை கங்கனா ரனவத் நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ்

எம்.ஜி.ஆர். ஆக, அரவிந்த்சாமி, அவர் மனைவி ஜானகியாக மதுபாலா நடிக்கின்றனர். ரோஜா படத்துக்கு பிறகு மதுபாலாவும் அரவிந்த் சாமியும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் சிங் தயாரிக்கின்றனர். ஜூன் மாதம் 26 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது.

மைனே பியார் கியா

மைனே பியார் கியா

லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக பிரபல முன்னாள் ஹீரோயின் பாக்யஶ்ரீ தெரிவித்திருந்தார். இவர் இந்தியில், சல்மான் கானுடன், மைனே பியார் கியா படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர். முதல் படத்திலேயே கவனிக்கப்பட்ட இவர், திருமணத்துக்குப் பிறகு அதிக படங்களில் நடிக்கவில்லை.

என்னால்தான் திருப்பம்

என்னால்தான் திருப்பம்

தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ள பாக்யஶ்ரீ, இப்போது பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிக்கும் ராதே ஸ்யாம் படத்திலும் நடித்து வருகிறார். 'தலைவி' படத்தில் நடிப்பது பற்றி கூறும்போது, 'இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறேன். 'தலைவி'யின் வாழ்க்கையில் என்னால்தான் திருப்பம் ஏற்படுவது போன்ற கேரக்டர். கங்கனாவுக்கும் எனக்கும் அதிகமான காட்சிகள் இருக்கின்றன. இப்போதைக்கும் இதைதான் தெரிவிக்க முடியும்' என்று கூறியிருந்தார்.

Recommended Video

SHORT HAIR SWEETIES| HEROINES WITH SHORT HAIR| FILMIBEAT TAMIL
முக்கியமான காட்சி

முக்கியமான காட்சி

அவர் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பதை சொல்ல மறுத்து வந்தார். இப்போது அவர் நடிக்கும் கேரக்டர் தெரிய வந்துள்ளது. அவர், ஜெயலலிதாவின் தாய் வேதாவாக இந்தப் படத்தில் நடிக்கிறார். ஜெயலலிதாவின் அம்மா பற்றி வெளியில் தெரியாத பல உணர்ச்சிபூர்வமான காட்சிகள் படத்தில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது முக்கியமான காட்சி என்பதால், படக்குழு இதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X