தமிழ் சினிமாவின் பாட்ஷா பாய், விஷ்வா பாய், ராஜு பாய் பிரச்சனைகள்
சென்னை: தமிழ் சினிமாவில் வரும் ஹீரோக்களின் பெயரில் பாய் இருந்தால் அது பிரச்சனையில் முடிகிறது.
வட இந்தியா பக்கம் சென்றால் பாய் பாய் என்று ஆளாளுக்கு அழைப்பார்கள். ஆனால் அதே கோலிவுட் பக்கம் வந்தால் பாய் என்றால் பிரச்சனை என்று அர்த்தமாக உள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோவின் பெயரில் பாய் இருந்தால் பிரச்சனை உறுதி.
இதோ சில உதாரணங்கள்...

பாட்ஷா
பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தின் பெயர் பாட்ஷா பாய். இந்த பாட்ஷா பாய் ஆன பிறகு தான் ரஜினிக்கும் அதிமுக செயலாளர் ஜெயலலிதாவுக்கும் இடையே முதல்முறையாக மோதல் ஏற்பட்டது.

தலைவா
தலைவா படத்தில் விஜய்யின் பெயர் விஷ்வா பாய். அந்த படம் சந்தித்த பிரச்சனைகளை நாங்கள் கூறி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை. அத்தனை பிரச்சனைகளை தாண்டி படம் ரிலீஸாகியும் ஓடவில்லை.

சூர்யா
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் அஞ்சான். அந்த படத்தில் சூர்யாவின் பெயர் ராஜு பாய். படமும் ஓடவில்லை, சூர்யாவும், லிங்குசாமியும் மக்களின் கேலி, கிண்டலுக்கு ஆளாகினர்.

பாய்
படத்தில் வரும் ஹீரோவின் பெயரில் பாய் இருந்தாலே அந்த படத்திற்கோ ஹீரோவுக்கோ பிரச்சனை தான். பெயரில் பாய் இருந்தால் கெத்தாகத் தான் உள்ளது. ஆனால் கூடவே ஏழரையும் வருகிறதே.

விஷ்வா பாய்
படத்தில் பெயரில் பாய் இருந்தாலே இத்தனை பிரச்சனை ஏற்படுகிறது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் விஷ்வா பாய் கதாபாத்திரத்தை சிலையாக வடித்து சென்னை குரோம்பேட்டையில் உள்ள தியேட்டர் ஒன்றில் நிறுவியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











