twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'கஸ்தூரி ஏதோ ஒரு முடிவுடன் தான் இருக்கிறார் '... பாக்யராஜ் செம கலாய்!

    தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு பைரவா என யாரும் பெயர் வைக்க மாட்டார்கள் என்று இயக்குனர் பாக்யராஜ் கூறினார்.

    |

    Recommended Video

    Aghori Trailer launch Bhagyaraj Speech: 'கஸ்தூரி ஏதோ ஒரு முடிவுடன் தான் இருக்கிறார் '-பாக்யராஜ்'

    சென்னை: தமிழக மக்கள் எல்லா கட்சிகாரர்களிடமும் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவதாக இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

    ஆர். பி .பிலிம்ஸ் சார்பில், ஆர். பி .பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து தயாரித்துள்ள படம் 'அகோரி '.

    இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் பாக்யராஜ், நடிகை கஸ்தூரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    இவர்களுடன் நடிகர் மைம் கோபி, ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி. ஜி. முத்தையா, தயாரிப்பாளர் பி டி செல்வகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

    'இனி எவனாவது பொண்ண நாசம் பண்ணணும்னு நெனச்சா... தூக்குதான்னு பயப்படனும்'... கொந்தளிக்கும் விஷால்! 'இனி எவனாவது பொண்ண நாசம் பண்ணணும்னு நெனச்சா... தூக்குதான்னு பயப்படனும்'... கொந்தளிக்கும் விஷால்!

    ஆச்சர்யம்

    ஆச்சர்யம்

    விழாவில் பேசிய இயக்குனர் பாக்யராஜ், "தமிழக மக்களை நினைத்தால் தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எந்தக் கட்சிக்காரன் காசு கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு, சத்தியம் செய்து கொடுக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். இவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று எண்ணி எண்ணியே எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ஆனால் இங்கே பேசிய கஸ்தூரி ஏதோ ஒரு முடிவுடன் தான் இருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது.

    தயாரிப்பாளர் பாலா

    தயாரிப்பாளர் பாலா

    இந்தப்படத்தின் தயாரிப்பாளர் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களைப்பற்றியும் தெளிவாகவும், அழகாகவும் எடுத்துரைத்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தயாரிப்பாளர் பாலா மொழி மாற்றுப் படங்களுக்கான வசனகர்த்தா என்று சொன்னார்கள். 'புலி முருகன்' மற்றும் 'லூசிபர் ' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதி இருப்பதாகச் சொன்னார்கள்.

    மகதீராவுக்கு வசனம்

    மகதீராவுக்கு வசனம்

    நான் ஒரே ஒரு டப்பிங் படத்திற்கு மட்டும்தான் வசனம் எழுதினேன். தாணுவின் வெளியீட்டில், ராம்சரண் நடித்த 'மகதீரா' என்ற படத்திற்கு மட்டும் தான் நான் தமிழில் வசனம் எழுதினேன். இதுவரைக்கும் நான் நேரடியாகத்தான் திரைப்படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறேன். மொழிமாற்று படங்களுக்கு எழுதியதில்லை. இதை ஒரு அனுபவமாக எண்ணி எழுத சம்மதித்தேன். அங்கு சென்றவுடன் தான் அதில் உள்ள சவால்களும், சங்கடங்களும் புரிந்தன.

    திறமை வேண்டும்

    திறமை வேண்டும்

    அம்மா என்ற வார்த்தை எல்லா மொழியிலும் ஒன்றாகத் தான் இருக்கும். ஆனால் தெலுங்கில் அப்பாவுக்கு ‘நானா' என்று அழைப்பார்கள். இதை எப்படி தமிழ் படுத்துவது என்று தெரியாமல் கஷ்டப்பட்டேன். இந்த தருணத்தில் தான் டப்பிங் பட வசனகர்த்தாக்கள் படும் சிரமத்தை உணர்ந்தேன். அதன் பிறகுதான் டப்பிங் படத்திற்கு வசனம் எழுதுவதற்கும் ஒரு திறமை வேண்டும் என்பதை உணர்ந்தேன்.

    வில்லன் பைரவா

    வில்லன் பைரவா

    நமக்கு பைரவா என்றால், வில்லத்தனம் செய்யும் மந்திரவாதி நினைப்பு தான் வரும். ஆனால் தெலுங்கில் ஹீரோவிற்கு பைரவா என்று பெயர் வைக்கிறார்கள். 'மகதீரா' ஹீரோவிற்கு பைரவா என்று பெயர் வைத்திருப்பார்கள். அது தமிழில் மொழிமாற்றம் செய்யும் போது ‘பார்த்திபா' என்று உச்சரிப்புடன் பொருத்தமாக வசனத்தை எழுதி இருப்பேன். இந்த ‘பைரவா'வை ‘பார்த்திபா'வாக மாற்றுவதற்கு பெரும் போராட்டமாக இருந்தது.

    பேய் படம்

    பேய் படம்

    பேய் பற்றி அப்படி ஒரு படம் எடுத்தால், மக்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். பேய் இருப்பது உண்மை என்றால், இந்த நாட்டில் போலீஸ் ஸ்டேஷன் என்பது இருக்காது. ஒருவரைக் கொலை செய்து விட்டால், அவர் பேயாக வந்து பழிக்குப் பழி வாங்கி கொன்றுவிடுவார். ஆனால் தற்போது கொலையாளியைப் போலீஸ்காரர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பேய் இல்லை என்பது உறுதியாகிறது. ஆனால் பேய் வந்து பழிவாங்குகிறது என்று ஒரு கான்செப்ட் தற்போது மக்களால் ரசிக்கப்படுகிறது", என அவர் கூறினார்.

    English summary
    Actor and director K.Bhagyaraj made a funny remake that Bhairava is a villain's name in tamil cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X