»   »  பொங்கலுக்குத் தயாராகும் விஜய்யின் பைரவா!

பொங்கலுக்குத் தயாராகும் விஜய்யின் பைரவா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் நடிக்கும் 60வது படமான பைரவா பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகவிருக்கிறது.

விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்தப் படத்தை, அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்பு இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது.


படத்தின் வியாபாரம் தெறியையும் மிஞ்சும் அளவுக்கு எக்கச்சக்க விலைக்கு விற்பனையாகி வருகிறது.


Bhairava is Vijay's Pongal Special

இந்தப் படத்தை பொங்கல் 2017 வெளியீடாகக் கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.
இப்போதைக்கு பொங்கலுக்கு உறுதியாக வெளியாகும் பட்டியலில் இடம்பிடித்துள்ள முதல் படம் பைரவாதான்.


பெரும்பாலும் தீபாவளி நேரத்தைத்தான் குறி வைப்பார் விஜய். இந்த முறை பைரவாவை பொங்கல் ஸ்பெஷலாகக் களம் இறக்குகிறார்.


இதற்கு முன் 2014-ல் விஜய் நடித்த ஜில்லா படம் பொங்கல் தினத்தில் வெளியானது. அதற்கு முன் 2012-ல் நண்பன் வெளியானது.

English summary
Vijay's Bhairava movie has been scheduled for Pongal 2017.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil