twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அன்று சல்மான் கான், இன்று இம்ரான் கான்: மனதை வென்ற 'பாகிஸ்தானி பாய்ஜான்'

    By Siva
    |

    Recommended Video

    அன்று சல்மான் கான், இன்று இம்ரான் கான்- வீடியோ

    சென்னை: சல்மான் கான் நடித்த பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் நடந்த சம்பவம் நிஜத்தில் நடந்துள்ளது.

    கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான் நடித்த பஜ்ரங்கி பாய்ஜான் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பாகிஸ்தானை சேர்ந்த வாய் பேச முடியாத 6 வயது சிறுமி தனது தாயுடன் இந்தியாவுக்கு வந்த இடத்தில் தனியாக சிக்கிவிடுகிறார்.

    செய்வது அறியாது தனியாக தவிக்கும் சிறுமியை விசா இல்லாமல் பாகிஸ்தானுக்குள் சென்று அவரின் பெற்றோரிடம் ஒப்படைப்பார் சல்மான் கான். சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைக்க சென்ற சல்மான் கானை இந்திய உளவாளி என்று கூறி பாகிஸ்தான் போலீஸ் அடித்து உதைக்கும்.

    மாநில காங்கிரஸ் துணை தலைவியாகும் பிக் பாஸ் சர்ச்சை நடிகை மாநில காங்கிரஸ் துணை தலைவியாகும் பிக் பாஸ் சர்ச்சை நடிகை

     பஜ்ரங்கி பாய்ஜான்

    பஜ்ரங்கி பாய்ஜான்

    போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் சல்மான் உண்மையாகவே பாகிஸ்தானுக்கு வந்த நோக்கத்தை புரிந்து கொண்டு அவரை எல்லையில் வந்து விடுவார். சல்மானை வரவேற்க இந்திய எல்லையில் மக்கள் குவிந்திருப்பார்கள். பாகிஸ்தான் எல்லையில் அந்நாட்டு மக்கள் கூடி பஜ்ரங்கி பாய்ஜான், பஜ்ரங்கி பாய்ஜான் என்று சல்மான் கானை வாழ்த்தி வழியனுப்பி வைப்பார்கள். படத்தில் அந்த காட்சியை பார்க்கும்போதே புல்லரிக்கும். தற்போது அந்த சம்பவம் நிஜத்திலும் நடந்துள்ளது.

    இம்ரான் கான்

    சல்மான் கானுக்கு பதிலாக இங்கு இம்ரான் கான், சிறுமிக்கு பதில் நம் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் உள்ளார். பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் இந்துவான சல்மான் கான் பாகிஸ்தானில் சிக்கிக் கொள்வார். அவர் நாடு திரும்ப இஸ்லாமிய போலீஸ்காரர் உதவி செய்வார். படத்தை போன்றே நிஜத்திலும் நடந்திருப்பதை பார்க்க பெருமிதமாக உள்ளது.

    பாராட்டு

    அபிநந்தனை உடனே விடுவிக்க வேண்டும் என்று அதிகாரத் தொனியில் இந்தியா பேசிய நிலையில் நாங்கள் அமைதியை விரும்புகிறோம் என்று கூறி அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கும் இம்ரான் கான் இந்திய மக்களின் மனங்களை வென்றுவிட்டார். ஒரு பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்தும், பாராட்டியும் இந்திய மக்கள் அதிக அளவில் ட்வீட் செய்துள்ள அதிசயம் நடந்துள்ளது.

     நன்றி

    நன்றி

    பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அபிநந்தனை விடுவிப்பதாக இம்ரான் கான் கூறிய வீடியோவை பார்த்த இந்திய திரையுலக பிரபலங்கள் இரு கை கூப்பி நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர். பாகிஸ்தானி பாய்ஜானுக்கு நன்றி.

    English summary
    The events happened in Salman Khan's Bajrangi Bhaijaan has happened for real in IAF wing commander Abhinandan's case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X