"அப்புசாமி - சீதாப்பாட்டி" புகழ் எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு!

By Vignesh Selvaraj

சென்னை : பிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி நேற்று இரவு 11.40 மணியளவில் காலமானார். இவருக்கு வயது 87.

ஜலகண்டபுரம் ராமஸ்வாமி சுந்தரேசன் என்ற இயற்பெயரை கொண்ட இவர் பாக்கியம் ராமசாமி என்ற புனைப்பெயரில் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார். பாக்கியம், ராமசாமி என்பது அவரது பெற்றோரின் பெயர் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் உருவாக்கிய கற்பனை கதாபாத்திரங்கள்தான் அப்புசாமி, சீதாப்பாட்டி என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பாத்திரங்களின் மூலமே அவர் பரவலாக அறிமுகமானார். அவருக்கு தமிழ் அறிஞர்கள், வாசகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அப்புசாமி

அப்புசாமி

'அப்புசாமியும் அற்புத விளக்கும்', 'அப்புசாமியும் 1001 இரவுகளும்', 'அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்' ஆகிய நாவல்கள் இவர் எழுதிய பிரபலமான நாவல்கள் ஆகும். இவர் பல ஆண்டுகளாக குமுதம் வார இதழில் 32 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வால்ட் டிஸ்னி

வால்ட் டிஸ்னி

சிறுவர்களுக்காக வால்ட் டிஸ்னி தயாரித்த 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' எனும் கார்ட்டூன் படத்திற்கு வசனம் எழுதியது இவர்தான். இவர் 'அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை', 'அக்கறை' ஆகிய அமைப்புகளையும் நடத்தி வந்தார்.

சிறுநீரக பிரச்னை

கடந்த சில நாட்களாக சிறுநீரக பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாக்கியம் ராமசாமி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.40 மணிக்கு காலமானார். மறைந்த பாக்கியம் ராமசாமி அவர்களுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர்.

கீழ்ப்பாக்கத்தில் இறுதி அஞ்சலி

கீழ்ப்பாக்கத்தில் இறுதி அஞ்சலி

சேத்துப்பட்டில் வசித்து வந்த பாக்கியம் ராமசாமி மறைந்த நிலையில், அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வாசகர்களுக்கு பேரிழப்பு

வாசகர்களுக்கு பேரிழப்பு

பலரது பால்யகால வாசிப்பு ஆர்வத்தை மேம்படுத்திய பாக்கியம் ராமசாமி மறைவு வாசகர்களையும், இலக்கிய உலகத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரை சிரிக்கவைத்த அவர் இனி அவர் உருவாக்கிய படைப்புகளின் வழியே மட்டுமே உயிர் வாழ்வார்.

முகவரி

முகவரி


அவரது இறுதிச் சடங்கு இன்று பிற்பகம் 2 மணி அளவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜ.ரா.சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி)
பிளாட் நம்பர் 2, சென்சுரி கார்டன்,
புது நம்பர் 47 (பழைய நம்பர் 22),
ஹாரிங்டன் ரோடு, சுரங்கப்பாதை அருகில்,
சேத்துப்பட்டு, சென்னை -31.

தொடர்புக்கு : அனில்ராஜ் ( +917358671700)

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X