நெட்டிசன்ஸ் விளாசல்.. வைரலானது கடத்தப்பட்ட நடிகைக்கு ஆதரவான பழைய போஸ்ட்.. அவசரமாக நீக்கிய ஹீரோயின்

By

கொச்சி: கடத்தப்பட்ட நடிகைக்கு ஆதரவாக, 2017 ஆம் ஆண்டு எழுதிய பேஸ்புக் பதிவு வைரலானதை அடுத்து, அதை அவசரமாக நீக்கியுள்ளார் பிரபல நடிகை.

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துவந்த மலையாள நடிகை ஒருவர், கடந்த சில வருடங்களுக்கு முன் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புகார் எழுந்தது.

மலையாள நடிகர் திலீப் தூண்டுதலின் பேரில்தான் இது நடந்தது என்று கூறி அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை, சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக சாட்சியம் அளித்த பலர் பின்னர் பல்டி அடித்தனர். மலையாள நடிகர் சங்க கலைநிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின் போது திலீப்புக்கும், பாதிக்கப்பட்ட நடிகைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

போலீஸ்தரப்பு சாட்சி

போலீஸ்தரப்பு சாட்சி

இதை தாங்கள் பார்த்ததாக நடிகை பாமாவும், நடிகர் சித்திக்கும் முதலில் தெரிவித்திருந்தனர். இதனால் இவர்கள் போலீஸ் தரப்பு சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் திலீப்புக்கும் அந்த நடிகைக்கும் இடையே நடந்த மோதல் பற்றி தெரியாது என்று கடந்த சில நாட்களுக்கு முன் கூறியதால், பிறழ் சாட்சிகளாக அறிவிக்கப்பட்டனர்.

ரம்யா நம்பீசன்

ரம்யா நம்பீசன்

இது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது. நடிகை பாமா, பாதிக்கப்பட்ட நடிகைக்கு நெருங்கிய தோழியாக இருந்தார். அதோடு திலீப் மனைவி காவ்யா மாதவனுக்கும் அவர் தோழியாக இருந்தார். பாமாவின் இந்த முடிவை எதிர்பார்க்காத நடிகை ரேவதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் ஆகியோர், அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

பச்சைத் துரோகம்

பச்சைத் துரோகம்

இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் பாமாவை நெட்டிசன்ஸ் விளாசித் தள்ளினர். தனது தோழிக்கு பாமா செய்தது பச்சைத் துரோகம் என்றும் கடுமையாக விளாசினர். இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக, கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகை பாமா ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

Recommended Video

யாருமா நீ ? இவ்ளோ அழகா இருக்க !! | TIKTOK FAME REVATHY INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL
கடும் விமர்சனங்கள்

கடும் விமர்சனங்கள்

அந்த பேஸ்புக் பதிவு இப்போது மீண்டும் வைரலானது. இதையடுத்தும் அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்நிலையில் தனது முந்தையை அந்த பதிவை, நடிகை பாமா திடீரென நீக்கியுள்ளார். இதையும் நெட்டிசன்ஸ் விமர்சித்து வருகின்றனர். நடிகை பாமா, தமிழில் ஆர்.கே ஹீரோவாக நடித்த 'எல்லாம் அவன் செயல்' படத்தில் நடித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X