ஜிந்தா தா பாடலுக்கு ரூ. 50 லட்சம் செட்டில் செய்த சஞ்சய் லீலா பன்சாலி
பிரபுதேவா இயக்கத்தில் அக்சய் குமார் நடித்து வெளியாகியுள்ள இந்தி படம் ரவுடி ரத்தோர். பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்துள்ள இந்த படம் ராஜமௌலி தெலுங்கில் எடுத்த விக்ரமார்க்குடு படத்தின் ரிமேக் ஆகும். தமிழில் இது சிறுத்தை என வெளிவந்தது.
இந்த படத்தினை பிரபல தயாரிப்பாளர் சன்சய் லீலா பன்சாலி தயாரித்துள்ளார். போட்ட பணத்திற்கு மேல் வசூலை குவித்து வரும் இந்த படத்திற்கு பாடல் ரூபத்தில் வந்தது சிக்கல். இந்த படத்தில் வரும் 'ஜிந்தா தா ஜி்ந்தா ஜிந்தா' பாடல் தெலுங்கு உரிமையை அனுமதி பெறாமல் இந்தி படத்தில் பயன்படுத்தியதற்கு ஐதாராபாத் ஆதித்யா இசை நிறுவனம் பிரச்சினையை கிளப்பியது.
தங்களுடைய பாடலை பயன்படுத்தியதற்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனையடுத்து நீதிமன்றத்திற்கு வெளியே சுமூகமாக பேசி முடித்த சஞ்சய் லீலா பஞ்சாலி 50 லட்சம் ரூபாய் கொடுத்து செட்டில் செய்தனர்.


Click it and Unblock the Notifications












